கடைசி இரண்டு டெஸ்டில் களைப்படைந்து ஜடேஜா சரியாக பந்து வீசவில்லையா? – அஷ்வின் பதில்!

0
472
Ashwin

சமீபத்தில் இந்தியாவில் வைத்து நடந்து முடிந்த 2023 பார்டர் கவாஸ்கர் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி, நான்காவது முறையாக தொடரை கைவசப்படுத்தி சாதித்தது!

இந்த வெற்றியில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் மிகப்பெரிய பங்கை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கொண்டிருக்கிறார்கள்!

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த தொடரில் மொத்தம் 25 விக்கட்டுகளையும் 100+ ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 22 விக்கட்டுகளையும் 100+ ரன்களையும் எடுத்து இருவருமே இந்தத் தொடரின் நாயகன் விருதை இணைந்து பெற்றுக் கொண்டார்கள்.

இதை அடுத்து இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடுயூப் சேனலில் சில முக்கியமான கருத்துக்களை இந்த தொடர் குறித்து பகிர்ந்து கொண்டார். மிக முக்கியமாக இதில் ஹர்பஜன் சிங் தொடர்ந்து தற்கால இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை பற்றி பேசி வருவதற்கு பதிலடி தந்திருந்தார். இதற்கும் முந்தைய நம் பதிவில் இந்த செய்தியை காணலாம்.

இதற்கு அடுத்து கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா களைப்படைந்து அந்த காரணத்தால் சரியாக பந்து வீச முடியாமல் போனது என்று வெளியில் பேச்சு இருந்தது. தற்பொழுது இது குறித்தும் தனது கருத்தை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது பற்றி அஸ்வின் பேசும்பொழுது
” ரவீந்திர ஜடேஜா இந்த தொடரில் மிகவும் அற்புதமாக பந்து வீசினார். அவர் கடைசி இரண்டு டெஸ்ட்களில் களைப்படைந்த காரணத்தால் சரியாக பந்து வீச முடியவில்லை என்ற குற்றச்சாட்டு வெளியில் இருந்தது. ஆனால் இது உண்மை கிடையாது. ஒரு நாள் பந்துவீச்சு சுமாராக இருக்கும் அன்று நமக்கு நிறைய விக்கெட் கிடைக்கும். ஒரு நாள் நம் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருக்கும் ஆனால் எதிரில் இருக்கக்கூடிய பந்துவீச்சாளர் ஆறு ஏழு விக்கட்டுகளை வீழ்த்துவார்!” என்று கூறியிருந்தார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடன் சேர்ந்து இன்னொரு வீரரும் தொடர் நாயகன் விருதை பெற்றிருக்கிறார். இது மகிழ்ச்சியான விஷயம்!” என்று கூறியிருக்கிறார்!

தொடர் நாயகன் விருதை வென்றிருந்த போது ரவீந்திர ஜடேஜா கூறும்பொழுது
” ஆடுகளம் மற்றும் விக்கெட் எடுப்பது குறித்தும், ஒரு வீரருக்கு எப்படி களத்தடுப்பு அமைப்பது என்றும் விவாதித்து பேசிக்கொண்டே இருப்போம். எங்கள் ஒருவருக்கொருவர் புரிதல் மிக நன்றாக இருக்கிறது!” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது!