“இலங்கை உடன் இந்தியா வேணும்னே தோக்க விளையாடியதா?!” – சோயப் அக்தர் சரமாரி விளாசல்!

0
3759
Akthar

இந்திய அணி நேற்று இலங்கை அணிக்கு எதிராக ஆசிய கோப்பையில் மோதிய போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று இருக்கிறது. கடந்த ஆசியக் கோப்பையில் இந்திய அணி தகுதிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

நேற்றைய போட்டியில் இந்திய அணி வென்றால், நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும், அதேவேளையில் இலங்கை அணி வென்றாலும் ஏறக்குறைய ரன் ரேட் பாகிஸ்தான் அணியை விட பலமாக இருக்கின்ற காரணத்தினால், இலங்கையும் தகுதி பெறும் என்கின்ற நிலை இருந்தது.

- Advertisement -

நேற்று இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக தோற்று, அடுத்து இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக வென்றால், இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள்தான் மோதிக் கொள்ளும் வாய்ப்பு 100% இருந்தது.

நேற்றைய போட்டியில் 80 ரன்களுக்கு விக்கெட் இழப்பில்லாமல் இருந்த இந்திய அணி, அதற்கு அடுத்து 133 ரன்களுக்கு பத்து விக்கெட் இழந்து, 213 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இலங்கை அணி வெல்லவும் ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்திய அணி கடுமையான சண்டை செய்து வென்றது.

பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் ரசிகர்கள், இந்திய அணி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என்று, வேண்டுமென்றே விளையாடி தோற்பதற்கு திட்டம் செய்துள்ளதாக, சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பரவிக் கொண்டிருந்தது.

- Advertisement -

தற்பொழுது இதைக் கண்டித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அக்தர் “மக்களுக்கு என்ன ஆச்சு? இந்தியா இலங்கையிடம் வேண்டுமென்று தோற்க விரும்புவதாக ஏன் சொல்கிறார்கள்? அது சம்பந்தமாக சமூக வலைத்தளத்தில் ஏன் மீம்ஸ்கள் வருகிறது? உங்களுக்கு ஏதாவது மனநிலை சரியில்லையா?

அசலங்காவும், வெல்லாலகேவும் எவ்வளவு சிறப்பாக பந்து வீசினார்கள் என்று பார்த்திர்களா இல்லையா? இந்தியா ஏன் தோற்க விரும்பப் போகிறார்கள்? அவர்கள் தோற்று அதனால் பாகிஸ்தான் வெளியேறுமா? இந்தியா இறுதிப் போட்டிக்கு இலங்கையை வென்று செல்வதற்காக அவ்வளவு கடுமையாக சண்டை செய்தார்கள்.

பும்ரா மற்றும் பலர் களத்தில் செய்த சண்டையை பாருங்கள். 20 வயது இலங்கை சிறுவன் பேட் மற்றும் பந்தில் செய்த சண்டையை பாருங்கள். ஆனால் நம் வீரர்களிடமிருந்து நாம் இதை பார்க்கவில்லையே. ஆனாலும் கூட நம் அணியை குற்றம் சொல்லத் தேவையில்லை. அவர்கள் கடந்த 25, 30 ஆட்டங்களாக இப்படி எதுவும் செய்யவில்லை!” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.