“நான் ரிட்டையர்டு ஆனதா பொய்தான் சொன்னேன்.. காரணம் இதுதான்!” – பென் ஸ்டோக்ஸ் தந்த ஒப்புதல் வாக்குமூலம்!

0
799
Stokes

இன்று உலகக் கிரிக்கெட் பெரிய தொடர்களின் பெரிய போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய வீரராக பார்க்கப்படுபவர், இங்கிலாந்து அணி டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ்!

ஐசிசி அறிவிக்கும் போட்டி அட்டவணைகள் மிகவும் நெருக்கடியை உண்டாக்குவதாக கூறி, அதற்கு ஏற்ற வகையில் தன் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது என்று, கடந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

- Advertisement -

பின்பு இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக தொடர்ந்து இருந்து, உலக டெஸ்ட் கிரிக்கெட் அணுகு முறையில் அதிரடியான மாற்றங்களை கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறார்.

இன்னொரு பக்கத்தில் வெள்ளைப் பந்து இங்கிலாந்து அணிகளுக்கு புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாஸ் பட்லருக்கு உதவியாக இருக்க டி20 கிரிக்கெட்டில் பங்கேற்று வருகிறார்.

மேலும் ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில், இங்கிலாந்து அணி அந்த உலகக் கோப்பையை வெல்ல, பென் ஸ்டோக்ஸ் மிக முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு, தனது ஓய்வு முடிவை வாபஸ் பெற்று தற்பொழுது திரும்ப வந்திருக்கிறார். நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிரடியாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 182 ரன்கள் குவித்து தனது வருகையை அறிவித்திருக்கிறார்.

இந்த வருடம் ஜூலையில் ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வருவீர்களா? என்ற கேள்வியை முன் வைத்தார்கள். அதற்கு பென் ஸ்டோக்ஸ் உறுதியாக வரமாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் அந்தச் சம்பவம் குறித்து கூறிய பெண் ஸ்டோக்ஸ் “நீண்டகாலமாக என் முழங்கால் குறித்து கேள்வி கேட்கப்பட்டு கொண்டே வந்தது. எனவே அந்தக் கேள்விகளை தவிர்க்க முடிவு செய்தேன். மீடியாவில் ரேடாரில் இருந்து ஒதுங்கி இருப்பதற்காக, நான் அப்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட மாட்டேன் என்று கூறினேன்.

50 ஓவர் கிரிக்கெட் எப்படி செல்கிறது என்பதை தெரிந்து கொள்ள இன்று எனக்கு நல்ல நாளாக அமைந்தது. நாங்கள் ஆட்டத்தை ஆரம்பித்து துவக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தோம். அதற்குப் பிறகு நாங்கள் எதிரணியை அழுத்தத்தில் வைக்க விரும்பினோம். பிறகு ஆட்டத்தில் நிமிர்ந்து பார்க்கும் பொழுது 23, 24 ஓவர்கள் இருந்தது. பிறகு மீண்டும் அங்கிருந்து என்னை நான் சரி செய்து கொள்ள வேண்டியதாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டை இப்படித்தான் விளையாட வேண்டி இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!