“பந்துக்கு மந்திரம் போட்டனா?.. நான் அப்ப செஞ்சது இதைத்தான்!” – ஹர்திக் பாண்டியா சுவாரசியமான விளக்கம்!

0
3951
Hardik

ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து எட்டாவது முறையாக இந்திய அணியிடம் நேற்று தோல்வி அடைந்திருக்கிறது. இதுவரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியிடம் தோற்றதில்லை என்கின்ற சாதனை இந்திய அணி தக்க வைத்திருக்கிறது!

நேற்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது நல்ல விஷயமாக அமைந்தது. அதே சமயத்தில் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமான ஒன்றாகத்தான் இருந்தது. இப்படியான ஒரு ஆடு களத்தில் பாகிஸ்தான் அணியை 199 ரன்களுக்கு சுருட்டியது இந்திய பந்துவீச்சாளர்களின் மிகச்சிறப்பான செயல்பாடாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

நேற்று பாகிஸ்தான் அணியும் முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்தது. பெரிய போட்டியில் இது நல்ல துவக்கம்தான். அதேபோல் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சேர்ந்து இரண்டு விக்கெட் 155 ரன்கள் என்று 30 ஓவருக்கு கொண்டு வந்தார்கள். இதுவும் சிறந்த அடித்தளத்தை உருவாக்கியதுதான்.

ஆனால் திடீரென்று விஸ்வரூபம் எடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி 36 ரன்கள் எடுக்க மீதமிருந்த எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி பாகிஸ்தான் அணியை 191 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து விட்டார்கள். இது ஒட்டுமொத்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த போட்டியில் சிறப்பாக ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் துவக்க ஜோடியை முகமது சிராஜ் அப்துல்லா ஷபிக் விக்கெட்டை கைப்பற்றி பிரித்தார். கடந்த சில வாரங்களாக பேட்டிங்கில் தடுமாறி வரும் இமாம் உல் ஹக் இந்த போட்டியில் நன்றாக தெரிந்தார். அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரளமான பேட்டிங் வெளிப்பட ஆரம்பித்தது. இதனால் கேப்டன் பாபர் அசாம் உடன் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவாவதற்கான அறிகுறி தெரிந்தது.

- Advertisement -

இந்த நிலையில் பந்துவீச்சில் இருந்த ஹர்திக் பாண்டியா ஓவரில் வெளியில் வீசப்பட்ட ஒரு பந்தை அபாரமாக பாயிண்ட் திசையில் கட் அடித்து பவுண்டரி ஆக்கினார். இது ஹர்திக் பாண்டியாவை மிகவும் கோபப்படுத்தியது. தவறான தந்தை வீசியதற்காக தன்னைத்தானே திட்டிக்கொண்டார். இதற்கு அடுத்த பந்தை வீசும் பொழுது பந்தை வைத்து ஏதோ பேசிவிட்டு வீசி, அதை இமாம் தவறுதலாக ஆடி ஆட்டம் இழக்க களத்தில் பெரிய சுவாரசியமான நிகழ்வாக அமைந்தது.

இதுகுறித்து தற்பொழுது ஹர்திக் பாண்டியாவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு அவர் பதில் அளித்து இருக்கிறார்.

கேள்வி: இந்த நேரத்தில் உங்களிடம் எல்லோரும் கேட்க நினைக்கும் கேள்வி, இமாம் விக்கெட்டை வீழ்த்தும் முன் பந்திடம் ஹர்திக் பாண்டியா என்ன சொன்னார்?

பதில்: நான் என்னை மோட்டிவேஷன் செய்து கொண்டேன். சரியான இடத்தில் பந்து வீச வேண்டுமென்றும், கூடுதலாக ஏதும் முயற்சி செய்யக் கூடாது என்றும் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் அவ்வளவுதான்.