“நான் சல்யூட் பண்ணது டீமுக்கு இல்ல.. இவருக்குத்தான்” – துருவ் ஜுரல் உருக்கமான பேச்சு

0
836
Jurel

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி செயல்பட்டு இருக்கும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

குறிப்பாக இந்த தொடரை எடுத்துக் கொண்டால் இந்திய அணிக்கு மொத்தம் நான்கு வீரர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். இதில் கடைசியாக பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் அறிமுகமானார்.

- Advertisement -

இதில் ரஜத் பட்டிதார் இதுவரையில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக செயல்படவில்லை. ஆனால் சர்பராஸ் கான் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்படுத்தி தனக்கான வாய்ப்பை நியாயப்படுத்தி இருந்தார்.

நான்காவது டெஸ்ட் போட்டியில் இன்று விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் பெற்ற வாய்ப்பை மிகவும் கச்சிதமாக பயன்படுத்தி அதே சமயத்தில் இந்திய அணியை நெருக்கடியான நிலையில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்.

இந்தப் போட்டியில் துருவ் ஜுரல் இந்திய அணி 177 ரன்களுக்கு ஏழு விக்கெட் என்று இருந்த பொழுது, ஆட்டத்தின் சூழ்நிலையைப் புரிந்து மிகவும் சிறப்பான முறையில் விளையாடும், இந்திய அணியை 307 ரன்களுக்கு கொண்டு வந்தார்.

- Advertisement -

மேலும் அவர் 90 ரன்களில் இருந்த பொழுது விளையாட முடியாத சிறந்த பந்து ஒன்றுக்கு தன்னுடைய விக்கட்டை இழந்தார். இதனால் தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை இழந்தார். அதே சமயத்தில் தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் அரை சதத்தை அடித்த பொழுது,அவர் சல்யூட் செய்தார். அப்பொழுது அது அணியினருக்கு என்பதாக எல்லோரும் நினைத்தார்கள்.

அப்பொழுது இது குறித்து அவர் கூறும் பொழுது “சதம் அடிக்காதது குறித்து எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. என்னுடைய விருப்பம் என்பது என்னுடைய அணி வெல்ல வேண்டும் நான் தொடரின் கோப்பையை உயர்த்த வேண்டும் அவ்வளவுதான். இந்திய அணிக்காகவும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதும் என்னுடைய நீண்ட நாள் கனவு.

என்னுடைய அப்பா ஒரு ராணுவ வீரர். அவர் கார்கில் போர் நடந்த பொழுது அதில் வீரராக பங்கெடுத்தவர். நான் அவருக்கு மரியாதை செய்யும் விதமாகவே முதல் அரை சதத்தை அடித்ததற்காக சல்யூட் செய்தேன்.

இதையும் படிங்க : வீடியோ..”தம்பி என்ன ஹீரோவாக ட்ரை பண்றியா?” – ரோகித் சர்பராஸ் கானை கண்டிப்பு.. என்ன நடந்தது?

நானும் குல்தீப் யாதவும் நல்ல புரிதல் கொண்டவர்கள். ஏனென்றால் நாங்கள் இருவருமே உத்தரப்பிரதேசத்திற்காக விளையாட கூடியவர்கள். எனவே நாங்கள் நேற்றே பேசி வைத்தோம். மேலும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் என்னை அடுத்த மகேந்திர சிங் தோனி என்ன கூறியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறி இருக்கிறார்.