“அந்த பெரிய மனுஷனை பார்க்க துடிச்சிட்டு இருக்கேன்.. இந்த முறை நடக்கும்” – துருவ் ஜுரல் நம்பிக்கை

0
452
Jurel

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சப்ராஸ்கான் மற்றும் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் இருவரும் அறிமுகமானார்கள்.

அறிமுகமான இரண்டு வீரர்களுமே சிறந்த முறையில் என் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் செயல்பட்டு இருந்தார்கள். சர்பராஸ் கான் அதிரடியில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.

- Advertisement -

அதே சமயத்தில் முதல் இன்னிங்ஸில் அஸ்வினுடன் சேர்ந்து துருவ் ஜுரல் மிக முக்கியமான 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். தனது அறிமுக சர்வதேச டெஸ்ட் போட்டியில் 46 ரன்கள் எடுத்தார்.

இதில் மிக முக்கியமாக அவர் வேகப்பந்து வீச்சில் பவுன்ஸ் திட்டத்திற்கு எதிராக மிகச் சிறப்பான முறையில் விளையாடினார். பந்துகளை அடிப்பது போலவே சரியாக விடுவதற்கும் திறமை வேண்டும். இந்தத் திறமை இவருக்கு மிகக் கூர்மையாக இருக்கிறது. இதன் காரணமாக இவர் வெளிநாட்டு டெஸ்ட்களிலும் இந்திய அணிக்காக விளையாட முடியும் என்று தெரிகிறது.

மேலும் இந்தியாவில் சுழல் பந்துவீச்சு என்று மட்டும் இல்லாமல் வேக மாறுபாடு இருப்பதால் வேகப்பந்து வீச்சிலும் விக்கெட் கீப்பிங் செய்வது மிகக் கடினமானது. ஆனால் இவர் குறிப்பிடும்படி விக்கெட் கீப்பிங்கையும் சிறப்பாக செய்திருந்தார். மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் பென் டக்கெட்டை சிறந்த முறையில் ரன் அவுட் செய்தார்.

- Advertisement -

தற்பொழுது மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி ஜார்க்கண்ட் ராஞ்சி மைதானத்தில் தொடங்கி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்திய வீரர்கள் அனைவரும் ராஞ்சி சென்று சேர்ந்திருக்கிறார்கள். இது மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊர் மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது சொந்த ஊரான ராஜ்ஜியல்தான் தொடர்ந்து தங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் துருவ் ஜுரல் தோனி குறித்து பேசும் பொழுது “நான் முதல்முறை பார்த்த பொழுது அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன். என் முன்னால் அவர் நிற்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவருடனான எனது தொடர்பு 2021 ஐபிஎல் தொடரின் போது ஆரம்பித்தது. அது என்னுடைய முதல் ஐபிஎல் சீசன். அந்த நிகழ்வு உண்மைதானா என்று சோதித்துக் கொள்ள என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

இதையும் படிங்க : “உங்க பெருமை இந்தியா கிட்ட செல்லாது.. ஜெயிக்க இத செய்யுங்க” – ஆரோன் பின்ச் இங்கிலாந்துக்கு ஐடியா

நான் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடிய பிறகு தோனி ஸாரை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. நான் அவருடன் எப்பொழுது பேசினாலும், ஏதாவது ஒரு புதிய விஷயம் எனக்கு தெரியவரும். நான் புதிதாக எதையாவது அவரிடம் கற்றுக் கொள்வேன். ராஞ்சியில் நான்காவது டெஸ்ட் நடக்கின்ற காரணத்தினால், அவரை எப்படியும் சந்திப்பேன் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.