தோனியின் பெயரை தப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் – ஹர்திக் டிராவிட் மீது இந்திய முன்னாள் வீரர் அதிரடித் தாக்குதல்!

0
222
dravid

2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு தோற்று வெளியேறி வந்தது. இந்தத் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலி, தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்தார்கள்!

இதற்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவங்களிலும் கேப்டனாக ரோஹித் சர்மாவும், தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் கொண்டுவரப்பட்டார்கள். இந்திய அணியின் உடைவு 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் போது ஆரம்பித்துவிட்டது. அந்தச் சரிவு இப்போது வரை தொடர்கிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம்!

- Advertisement -

அப்போது இருந்து இப்போது வரை டிராவிட் தலைமை பயிற்சியில் டி20 மற்றும் டெஸ்ட் வடிவங்களில் உலக கோப்பையை இந்திய அணி இழந்திருக்கிறது. உள்நாட்டில் நீண்ட காலம் கழித்து ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியவுக்கு எதிராக இழந்தது. பங்களாதேஷில் ஒருநாள் தொடரை இழந்தது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 தொடரை இழந்திருப்பது என தொடர்கிறது.

இவர்கள் தொடர்ச்சியாக தோல்வி முகத்தில் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால், இவர்கள் செய்கின்ற பரிசோதனை முயற்சிகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி இந்திய முன்னாள் வீரர்களிடமும் பெரிய விமர்சனத்தை கொண்டு வரக்கூடியதாக இருக்கிறது. பலவீரர்கள் வெளிப்படையாக தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

இந்த வகையில் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் சமீப காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவர் வெளிப்படையாகவே கேப்டன் மற்றும் பயிற்சியாளரை தாக்கி பேசி வருகிறார்.

- Advertisement -

இந்த முறை அவர் இது குறித்து கூறும் பொழுது ” இந்திய கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சில காலமாக மிகச் சாதாரணமான அணியாக இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதி பெற முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தொடரை இழந்து இருக்கிறது. ஒருநாள் தொடரிலும் சரியாக செயல்படவில்லை. இந்த நேரத்தில் முட்டாள்தனமான அறிக்கைகளை வெளியிடாமல், பதிலுக்கு அவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்வார்கள் என்று நம்புகிறேன்.

இந்திய கிரிக்கெட் அணி தனது திறமையை மேம்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அவர்களின் பசி மற்றும் தீவிரம் குறைபாடாக இருக்கிறது. மேலும் கேப்டன் எந்தவித துப்பும் இல்லாமல் இருக்கிறார். பந்துவீச்சாளர்களால் பேட்டிங் செய்ய முடியாது பேட்ஸ்மேன்களால் பந்து வீச முடியாது என்று அணி இருக்கிறது. கண்மூடித்தனமான ஆட்களை தேடாமல் அணிக்கான ஆட்களை தேட வேண்டும். உங்களுக்குப் பிடித்த வீரர் என்பதை விட அணிக்கு யார் நன்மையான வீரராக இருப்பார்கள் என்று பார்க்க வேண்டும்.

இந்த தோல்விக்கு இவர்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். பிராசஸ் என்ற வார்த்தை இப்பொழுது மிகத் தவறாக பயன்படுத்தப்படுகிறது. எம் எஸ் தோனி இந்த வார்த்தையை பயன்படுத்திய பொழுது அது அர்த்தம் மிகுந்ததாக இருந்தது. இப்போது இவர்கள் எதற்கெடுத்தாலும் இதைச் சொல்கிறார்கள். இவர்களிடம் தேர்வில் நிலைத்தன்மையில்லை மேலும் சீரற்ற விஷயங்கள் நிறைய இருக்கிறது!” என்று மிகக் காட்டமாகத் தனது பேச்சில் கூறி இருக்கிறார்!