“சொல்லி அடிப்பதில் தல கில்லி” – வைரலாகும் கடந்த வருடம் தோனி கொடுத்த வாக்குறுதி!

0
1195
Dhoni

நடப்பு ஐபிஎல் 16 வது சீசனில் பிளே ஆப் சுற்றுக்குக் குஜராத் அணிக்கு அடுத்து சிஎஸ்கே இரண்டாவது அணியாகத் தகுதி பெற்று இருக்கிறது. இதையடுத்து குஜராத் அணிவுடன் இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் விளையாட இருக்கிறது!

இதுவரை நடைபெற்றுள்ள 16 ஐபிஎல் சீசனில் 14 சீசன்களில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதில் 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை தக்க வைத்திருக்கிறது.

- Advertisement -

இரண்டு முறை மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. ஐபிஎல் தொடரின் வரலாற்றில் முதல்முறையாக 2020 ஆம் ஆண்டு ப்ளே ஆப் சுற்றுக்குச் சென்னை தகுதிப் பெறாமல் போனது. ஆனால் அடுத்து 2021 ஆம் ஆண்டு வலிமையாகத் திரும்பி வந்து கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் ஆனது

இதற்கு அடுத்து கடந்த ஆண்டு அதாவது கடந்த ஆண்டு சென்னை அணிக்கு ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான ஆண்டாக பதிவானது. மொத்தம் நான்கு போட்டிகளை மட்டும் வென்று 8 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தையே பிடித்தது.

கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட பொழுது இயன் பிஷப் மகேந்திர சிங் தோனியின் ஐபிஎல் எதிர்காலம் குறித்து கேள்வியை முன் வைத்தார். அதற்கு மகேந்திர சிங் தோனி தெரிவித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இயன் பிஷப் கேள்விக்கு அப்போது மகேந்திர சிங் தோனி ” அடுத்த ஆண்டு எனக்குக் கடைசி ஆண்டாக ஐபிஎல் தொடரில் இருக்குமா? இல்லையா? என்பது ஒரு பெரிய கேள்வி. ஏனென்றால் இரண்டு வருடங்களை நம்மால் சரியாகக் கணிக்க முடியாது. ஆனால் நிச்சயமாக அடுத்த ஆண்டு வலுவாக வருவதற்கு கடுமையாக உழைப்பேன்!” என்று கூறியிருந்தார்!

அதேபோல் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தி இருக்கிறது. மேலும் இப்படியான கம்பேக் கொடுத்தால் சாம்பியன் பட்டம் அடித்துதான் கம்பேக் கொடுக்கும். எனவே இந்த முறையும் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று மிகவும் எதிர்பார்க்கிறார்கள்!