“தோனி உலக கோப்பையை ஜெயிக்கல.. அத நீங்க புரிஞ்சுக்கனும்!” – ஏபி.டிவில்லியர்ஸ் எதிர்பார்க்காத பேச்சு!

0
3934
Dhoni

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்றால் முதல் இடத்தில் இருப்பவர் மகேந்திர சிங் தோனிதான்.

மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி என்பதை உலககோப்பை வெற்றிகளைக் கொண்டும் அளக்கலாம். அதேபோல் அவர் கிரிக்கெட்டை அணுகிய விதம் எப்படி இருந்தது? என்பதையும் வைத்து அளக்கலாம்.

- Advertisement -

இப்படி இரண்டு வகைகளிலும் மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சியை அணுகும் பொழுது, அவர் உலகத்தின் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும், இந்திய கிரிக்கெட்டில் அவர்தான் சிறந்த கேப்டன் என்பதும் உறுதியான கருத்தாக இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டில் 2007 ஆம் வருடம் என்பது மிகவும் மோசமான ஒரு ஆண்டு. அந்த வருடம் இந்திய அணி வெஸ்ட் இந்தியா நாட்டில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணியுடன் தோற்று முதல் சுற்றில் வெளியேறி வந்தது. இதன் காரணமாக ரசிகர்கள் வீரர்களின் வீடுகளில் தாக்குதல் நிகழ்த்தினார்கள். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

அதே ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு முதன் முதலில் நடத்தப்பட்ட உலகக் கோப்பை இந்திய அணிக்கு தலைமை தாங்கி மகேந்திர சிங் தோனி வென்று வந்தார். ஒரு உலகக் கோப்பை வெற்றி இந்திய கிரிக்கெட்டின் மோசமான அத்தனை நிலைமைகளையும் உடனடியாக மாற்றியது.

- Advertisement -

அத்தோடு அங்கிருந்து 3 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக தொலைநோக்காக உழைத்து, இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற இருந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்து, தன்னுடைய கேப்டன்ஷியில் இரண்டாவது உலகக் கோப்பையையும் வென்றார். இத்தோடு 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராப்பியையும் வென்றார்.

இரண்டு உலகக் கோப்பைகள் மற்றும் 3 ஐசிசி தொடர்களை வென்ற ஒரே இந்திய கேப்டனாக அவர்தான் இருக்கிறார். மேலும் இந்த மூன்றையும் வென்ற ஒரே உலக கேப்டனாகவும் மகேந்திர சிங் தோனி மட்டும்தான் இருக்கிறார்.

தற்பொழுது பொதுவான கிரிக்கெட் என்ன என்பது குறித்து பேசி உள்ள ஏபி.டிவில்லியர்ஸ் கூறும் பொழுது
“கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. இங்கு உலகக் கோப்பையை ஒரு வீரரால் மட்டும் வெல்ல முடியாது. ஆனால் சமூக வலைதளங்களில் நான் இப்படித்தான் பார்க்கிறேன்.

மகேந்திர சிங் தோனி உலக கோப்பையை வெல்லவில்லை. இந்தியாதான் உலகக் கோப்பையை வென்றது. இதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இதேபோல் 2019 ஆம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பையை வெல்லவில்லை. இங்கிலாந்துதான் உலகக் கோப்பையை வென்றது.

ஒரு உலகக் கோப்பையை ஒரு அணி வெல்வதற்கு பின்னால் பலர் இருக்கிறார்கள். பயிற்சியாளர்கள், பயிற்சி ஊழியர்கள், அணித் தேர்வாளர்கள், கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள், இயக்குனர்கள், மேலும் மாற்று வீரர்கள், இப்படி பல பேர் இருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!