தோனி எனக்கு இதை சொன்னார்; அதை இப்போது வரை செய்கிறேன் – ஹர்திக் பாண்டியா புதிய தகவல்!

0
398
Hardikpandya

ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை தந்தால் ஒரு அணி மிகப்பெரிய தொடர்களை வெல்ல முடியும். இந்த வகையில் இந்திய அணியின் மிக மதிப்பு மிக்க வீரராக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருக்கிறார்!

ஹர்திக் பாண்டியா கிரிக்கெட் வாழ்க்கையை அவரது காயத்திற்கு முன் பின் என்று பிரிக்கலாம். காயத்திற்கு முன் அவரது ஆட்டத்தில் வேகம் அதிகமாக இருக்கும். ஆனால் காயத்திற்குப் பிறகு திரும்பி வந்து ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு, அவரது ஆட்டத்தில் விவேகமும் முதிர்ச்சியும் அதிகமாக வெளிப்படுகிறது!

- Advertisement -

பந்துவீச்சாளராக, பேட்ஸ்மேனாக, களத்தில் பீல்டராக மற்றும் கேப்டனாக தானே முன்னின்று பொறுப்பெடுத்து செயலாற்றுவது அவரை புதிய ஒரு பரிணாமத்தில் காட்டுகிறது. அவரிடமிருந்து மிகச் சிறந்த தலைமைப் பண்பு வெளிப்பட்டிருக்கிறது. இந்த வருடம் ஐபிஎல் தொடரை அவரது தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிதான் கைப்பற்றியது என்பது நாம் அறிந்ததே.

தற்பொழுது சில முக்கியமான விஷயங்களை ஹர்திக் பாண்டியா பகிர்ந்திருக்கிறார். அவர் மகேந்திர சிங் தோனி குறித்து கூறும் பொழுது “விளையாடும் பொழுது ஸ்கோர் போர்டை பார்த்து விளையாட வேண்டும் என்று எனக்கு தோனி ஆரம்பத்தில் கூறினார். அது நமக்காக அல்ல அணிக்கு என்ன தேவை என்று உணர்ந்து விளையாடுவதற்காக. நான் இப்போது வரை அதை பின்பற்றி வருகிறேன் ” என்று கூறியுள்ளார்.

மேலும் ஹர்திக் பாண்டியா பேசும்பொழுது ” கடவுள் என் மீது கருணை காட்டினார். என் உடற்தகுதி நல்ல முறையில் முன்னேறி உள்ளது. இதனால் என்னால் ஃபீல்டிங் பயிற்சியில் அதிக நேரம் ஈடுபட முடிகிறது. நான் இப்பொழுது பழைய மாதிரி இயற்கையாக இருக்கிறேன். எப்பொழுதும் பீல்டிங் செய்வதில் மற்றவர்களைவிட விதிவிலக்காக இருக்க விரும்பியவன். இப்பொழுது என் உடற்தகுதி உயர்ந்துள்ளதால், நான் சில பீல்டிங் பயிற்சி முறைகளில் ஈடுபட்டு கடினமான கேட்ச்களை பிடிக்கிறேன் . எங்கள் ஃபீல்டிங் பயிற்சியாளர் உடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. மேலும் என் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த சில கேட்ச்களை இந்த டி20 உலக கோப்பை தொடரில் பிடிக்க விரும்புகிறேன் ” என்று கூறியுள்ளார்!

- Advertisement -