“நான் போன பிறகு, தோனி அந்த விஷயத்தை சரியாக செய்தார்; ஆனால் ரோகித் சர்மா..?” – பிசிசிஐ தலைவர் கங்குலி ஓபன் டாக்!

0
1269

கேப்டன்ஷிப் மாற்றத்தை ரோகித் சர்மா எப்படி கையாண்டு கொண்டிருக்கிறார் என்பது குறித்து ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்தவர் சவுரவ் கங்குலி. இவர் கேப்டன் பொறுப்பேற்ற பிறகு பல இளம் வீரர்களை இந்திய அணிக்குள் கொண்டு வந்து மாறுபட்ட அணியாக உருவாக்கினார். ஒவ்வொரு வீரரின் பங்களிப்பையும் முக்கியமானதாக கருதி அவர்களுக்கென பிரத்தியேக பொறுப்பையும் கொடுத்தார். அதேநேரம் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் மட்டும் செய்யாமல் குறைந்தபட்சம் ஓரிரு ஓவர்கள் பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்றும் கருதி துவக்க வீரர்கள் முதல் அனைவரும் பந்து வீசும் அளவிற்கு வீரர்களை அணியில் வைத்திருந்தார்.

- Advertisement -

கங்குலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு மகேந்திர சிங் தோனி அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்திய அணி பாதிப்பிற்கு உள்ளாகும் என விமர்சனங்கள் முன்வைத்த போது கங்குலியை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு ஐசிசி தொடர்கள் அனைத்தையும் வெற்றி பெறும் அளவிற்கு உயர்ந்து நின்றார். இவர் தலைமையில் இந்திய அணி டி20 உலக கோப்பை ஒரு நாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என அனைத்தையும் வென்றது. மேலும் இந்திய அணி முதல் முறையாக நம்பர் ஒன் இடத்திற்கு டெஸ்ட் தரவரிசையில் உயர்ந்தது.

தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு விராட் கோலியிடம் அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது. விராட் கோலி ஐசிசி தொடர்களில் பெரிதளவில் செயல்படவில்லை என்றாலும் இரு தரப்பு தொடர்களில் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். இவரும் இளம் பட்டாளங்களை உருவாக்குவதற்கு முனைப்புடன் செயல்பட்டார். கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகிய பிறகு, ரோகித் சர்மாவிடம் அந்த பொறுப்பு இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தற்போதைய பிசிசிஐ தலைவரான சௌரவ் கங்குலி ரோஹித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு மற்றும் தோனி மற்றும் விராட் கோலி இருவர் தலைமையிலான இந்திய அணி எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

“இந்திய அணி தொடர்ந்து சிறப்பான கேப்டன்களை உருவாக்கி வருகிறது. அவர்களும் தங்களது பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். எனது கேப்டன் பொறுப்பிற்கு பிறகு தோனி அதை லாவகமாக எடுத்துச் சென்று இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். விராட் கோலி முற்றிலும் வித்தியாசமானவர். இவரது தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளை பெற்றது. வெற்றிகரமான கேப்டன்களில் முதன்மையானவராக அவர் இருக்கிறார்.

தற்போது ரோகித் சர்மா திறம்பட கையாண்டு வருகிறார். அமைதியான முறையில் பல திட்டமிட்டலுடன் செயல்பட்டு வருவது தெரிகிறது. விராட் கோலி சர்வதேச போட்டிகளில் நல்ல சாதனைகளை படைத்திருக்கிறார். ரோகித் சர்மாவிற்கு ஐபிஎல் அனுபவம் இருக்கிறது. அதனால் சர்வேச போட்டிகளில் அதன் தாக்கம் இருக்கும் என்று நம்புகிறேன். எந்த ஒரு கேப்டனையும் தனித்தனியே ஒப்பிட்டு பேச எனக்கு விருப்பம் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செயல்பட்டு வருகின்றனர். இறுதியில் இந்திய அணி பயன்பெற வேண்டும்.” என்றார்.