“இமாலய சிக்ஸர்களுடன் பயிற்சியை துவங்கிய தோனி” -வீடியோ இணைப்பு!

0
399

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற மார்ச் மாதம் இறுதியில் இருந்து தொடங்கப் பட இருக்கின்றன . இதற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை . ஆனால் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடக்கும் என தெரிகிறது .

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக தனது பயிற்சியை தொடங்கியிருக்கிறார் . 2020 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் மார்ச் மாதம் தொடங்க உள்ள போட்டிகளுக்காக தற்பொழுது பயிற்சியை தொடங்கி விட்டார் எம்எஸ்.தோனி.

- Advertisement -

2021ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வருடம் மிகவும் மோசமாக ஆடி புள்ளிகள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் முடித்தது . இந்த வருடம் மினி ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் மற்றும் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களுடன் களம் இறங்கும் சிஎஸ்கே அணி நிச்சயமாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கும்.

இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் துவங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் வேலையில் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தற்போதிலிருந்தே பயிற்சியை துவங்கியிருக்கிறார். அவரது வயதை கருத்தில் கொண்டு இதுதான் அவரது கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கனித்து வருகின்றனர். மேலும் கடைசி ஐபிஎல் போட்டிகளில் வெற்றியுடன் தன்னுடைய பயணத்தை முடிக்க வேண்டும் என எம்எஸ் தோனி தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். பயிற்சியின் போது அவர் அடித்த இமாலய சிக்ஸர்கள் தோனி எப்போதுமே பழைய தோனி தான் என காட்டுவது போல் இருந்தது .

இந்நிலையில் தோனி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகிவருகிறது . இதுவரை 234 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியுள்ள தோனி 4978 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி
39.5 ஆகும் . பல நேரங்களில் அணியை இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்று இருக்கிறார் தோனி .

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போதே நிச்சயமாக சென்னையில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு முன்பாக விளையாடுவேன் என உறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . எம் எஸ் தோனி பயிற்சி செய்யும் வீடியோ இதோடு இணைக்கப்பட்டுள்ளது .