தோனி இந்த முறை கேப்டனா இருந்திருந்தா.. நடந்த கதையே வேறயா இருந்திருக்கும் – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

0
222
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளிம்பு வரை வந்து ப்ளே ஆப் வாய்ப்பைக் கடைசியில் இழந்து வெளியேறியது. இந்த நிலையில் தோனி விளையாடும் வரையில் அவரே கேப்டனாக இருந்திருக்க வேண்டும் என ஏபி டிவில்லியர்ஸ் பரபரப்பான கருத்து ஒன்றைக் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். மேலும் புதிய கேப்டனாக இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜை அவரை உருவாக்கிக் கொண்டு வந்தார். அவருடைய கேப்டன்சி மோசம் என்று சொல்லும் அளவில் இல்லை. ஆனால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுகின்ற அளவில் இல்லை.

- Advertisement -

கடைசியாக ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பின்னர்களை அவர் பயன்படுத்திய விதம் சரியாக இல்லாதது சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பில் இல்லாததற்கும் காரணமாக அமைகிறது. கேப்டன்சி அனுபவம் இன்மை களத்தில் எதிரொலித்தது. அதே சமயத்தில் தோனி எல்லா முடிவுகளையும் ருதுராஜை எடுக்க விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து ஏபி டிவிலியர்ஸ் பேசும்போது ” சிஎஸ்கே அணியில் தோனி இருந்து அவர் கேப்டனாக இல்லாத போது, கேப்டன்சி செய்யக்கூடிய அந்த பொறுப்பு வீணாக போகிறது என்று நான் முன்பே நினைத்தேன். துரதிஷ்டவசமாக இந்த முறையும் அவர்கள் கேப்டனை மாற்றியது பலன் அளிக்காமல் போய்விட்டது.

பெரும்பாலான போட்டிகளில் அவர்கள் நன்றாகவே விளையாடினார்கள் ஆனால் அது நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் அளவுக்கு இல்லாமல் போய்விட்டது. இது ருதுராஜ் கேப்டன்சியால் வந்தது கிடையாது. ஆனால் தோனி கேப்டனாக இருந்திருக்க வேண்டும் என விரும்பினேன். நான் தோனி கேப்டனாக இருக்கும் பொழுது பலமுறை அவர் எதிர்த்து விளையாடி இருக்கிறேன். அவர் கேப்டனாக இருப்பது எப்பொழுதும் எதிரணிக்கு அச்சுறுத்தக் கூடிய ஒன்று.

- Advertisement -

இதையும் படிங்க: ஆர்சிபி கத்தி கொண்டாடினா.. சிஎஸ்கேவை மட்டும் ஜெயிச்சா.. ஐபிஎல் கோப்பை தர மாட்டாங்க – அம்பதி ராயுடு விமர்சனம்

சிஎஸ்கே அணி கொஞ்சம் கொஞ்சமா விஷயங்களை எடுத்துச் சென்றது. ஆனால் அவர்களிடம் எதிரணியை பயமுறுத்தும் காரணி என்று எதுவும் இல்லை. தற்போது ருதுராஜ்தொடர்ந்து கேப்டனாக இருக்கட்டும். அவர் சிஎஸ்கே அணிக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான கேப்டனாக இருப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்