கெவின் பீட்டர்சன் சொன்ன மாதிரி தோனி செய்யணும்; அவர் தலைமுறைக்கு இல்லை நூற்றாண்டுக்கு ஒரு தடவை வர வீரர் – கவாஸ்கர் கோரிக்கை!

0
2029
Dhoni

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கான இந்த வருடத்துக்கான ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடியது!

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருக்க முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியால் 144 ரன்கள் மட்டும்தான் எடுக்க முடிந்தது.

- Advertisement -

அடுத்து விளையாடிய கொல்கத்தா அணி ஒரு ஓவர் மீதம் வைத்து நிதிஷ் ரானா மற்றும் ரிங்கு சிங் அரை சதங்களால் எளிதான வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி கூறியது.

ஆனால் ரசிகர்களுக்கு இது ஒரு புதுவித பயத்தை உருவாக்கியது. அதாவது இந்த நன்றி அறிவிப்பு மகேந்திர சிங் தோனி தனது ஐபிஎல் தொடரை இறுதியாக விளையாடுகிறார் என்பதற்காக இருக்கலாம் என்று அஞ்சுகிறார்கள்.

- Advertisement -

இதற்கு முன்பு கிரிக்கெட் வர்ணனையாளர் ஒரு போட்டியின் டாஸ் நிகழ்வு போது கடைசி ஐபிஎல் தொடரா என்று கேட்க, நீங்கள் தான் அப்படி சொல்கிறிர்கள், நான் சொல்லவில்லை என்று தோனி கூறி இருந்தார்.

இதுகுறித்து கவாஸ்கர் மிகவும் உருக்கமான ஒரு கோரிக்கையை மகேந்திர சிங் தோனிக்கு வைத்திருக்கிறார். அவர் கெவின் பீட்டர்சன் பேசிய ஒரு விஷயத்தைக் கூறி அந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்.

கவாஸ்கர் கூறும் பொழுது “கெவின் பீட்டர்சன் இம்பேக்ட் பிளேயர் பற்றி பேசி இருந்தார். ஒரு இம்பேக்ட் பிளேயராக மகேந்திர சிங் தோனி அணிக்குள் இருந்து விளையாட முடியும்.

அவரைப் போன்ற வீரர்கள் தலைமுறைக்கு ஒரு முறை வரக்கூடியவர்கள் இல்லை நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடியவர்கள்.

இந்தக் காரணத்தால் அவர் இன்னும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இது அவருடைய கடைசித் தொடர் என்று நாங்கள் பார்க்கவில்லை. சில காலம் ஐபிஎல் தொடரில் அவர் இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!