இரண்டு உலகக் கோப்பைகள் ஒரு ஐசிசி தொடர் என மொத்தமாக மூன்று மிகப்பெரிய கோப்பைகளை வென்று உலகில் ஒரே கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருக்கிறார்.
இந்திய அளவில் மட்டுமல்லாது உலக கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த கேப்டன்களின் வரிசையில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனிக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது. தற்பொழுது 42 வது வயதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடர்கிறார்.
தான் நல்ல நிலையில் பேட்டிங் மற்றும் கேப்டன் விக்கெட் கீப்பிங்கில் இருந்த பொழுது கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்ந்து அடுத்த கேப்டனாக விராட் கோலி கொண்டு வர தடையில்லாமல் நின்றார். இந்திய கேப்டன்களில் கேப்டன் பதவியில் இருந்து நகர்ந்து புதிய கேப்டனோடு மிகவும் சுமூகமாகவும் மரியாதையோடும் இருந்தவர் மகேந்திர சிங் தோனி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி கேப்டனாக களம் கண்டார். அந்த அணியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆகவும், விராட் கோலிக்கு பின்னாலிருந்து ஆதரவாகவும் மகேந்திர சிங் தோனி நின்றார்.
லீக் சுற்றில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து அணி இடம் மட்டுமே தோற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது.
மழையால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை அபாரமாக மடக்கி, அடுத்து வந்து பேட்டிங் செய்கையில் மொத்தமாக சிக்கி இந்திய அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா 77 ரன்களும், இறுதிக்கட்டத்தில் மிகச் சிறப்பாக போராடிய மகேந்திர சிங் தோனி 50 ரன்னில் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டும் ஆக இந்திய அணி அந்த உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.
இது குறித்து யுவராஜ் சிங் தந்தை சில வருடங்களுக்கு முன்பு மகேந்திர சிங் தோனி குறித்து மிகவும் அவதூறான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து பேசிய ஒரு காணொளி மீண்டும் புதிய தலைப்பில் வைரலாக்கப்பட்டிருக்கிறது. இணைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
The reason why ms dhoni was out by himself in semi final 2019 wc.😡
— Yograj Singh 💙 (@Yograjsingh09) July 10, 2023
Watch my full interview👇👇 pic.twitter.com/AqtbWB2trw
அதில் யுவராஜ் சிங் தந்தை பேசியிருப்பதாவது ” தோனி வேண்டுமென்றே நன்றாக பேட் செய்யவில்லை. அதனால் இந்தியா நியூசிலாந்து அணியிடம் தோற்றது. வேறு எந்த கேப்டனும் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று அவர் விரும்பவில்லை.
ஒரு முனையில் அபாரமான துணிச்சலை வெளிப்படுத்தி ரவீந்திர ஜடேஜா இலக்கை நெருங்க உதவி செய்தார். ஆனால் தோனி தனது திறமைக்கு ஏற்ப விளையாடவில்லை. அவர் தனது திறமையில் 40 சதவீதத்தை வெளிப்படுத்தி இருந்தாலே நாம் அந்த போட்டியில் 48வது ஓவரிலேயே வென்று இருக்கலாம்” என்று கூறி இருக்கிறார்!
தற்பொழுது இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கின்ற நிலையில் மீண்டும் யுவராஜ் சிங் தந்தையின் சர்ச்சையான குற்றச்சாட்டு வீடியோ வெளியே கிளறப்பட்டு உள்ளது!