இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது சிஎஸ்கே வீரருமான மகேந்திர சிங் தோனி பழைய வீரர்களில் சில குறிப்பிட்டவர்கள் சேர்ந்து விளையாடுவதை பார்க்க தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தற்போது தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் சீசனில் சுமாரான முறையில் விளையாடி வருகிறது. மேலும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் சரியானவர்களாக இல்லை. தற்போது சிஎஸ்கே அணி மிகவும் கடினமான காலகட்டத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே ரசிகர்களே தோனி ஓய்வு பெறுவது நல்லது என்று கூறி வருகிறார்கள். மேலும் நேற்று டெல்லிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் தோனி ஓய்வு பெறுவார் என்கின்ற செய்தி பரவியது. அதற்கேற்றார் போல் அவருடைய பெற்றோர்கள் முதன்முறையாக அவர் விளையாடுவதை பார்க்க மைதானத்திற்கு வந்திருந்தார்கள்.
இந்த நிலையில் தோனி ஓய்வு முடிவை நேற்று அறிவிக்கவில்லை. மேலும் தோனி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய ஓய்வு குறித்து கூறும் பொழுது தான் ஐபிஎல் மத்தியில் ஓய்வு பெற விரும்பவில்லை எனவும், அடுத்த ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது, ஒரு வருடத்தில் தன் உடல் எப்படி இருக்கிறது என்பதை வைத்து முடிவு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் பழைய வீரர்கள் குறித்து பேசி உள்ளது ” பழைய வீரர்களின் யார் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன் என்றால் நான் இந்திய வீரர்களை தேர்ந்தெடுக்கிறேன். ஆட்டத்தை துவங்கும் சேவாக், இதற்கு அடுத்து சச்சின் மற்றும் அவரைத் தொடர்ந்து கங்குலி. இவர்களை ஏன் தேர்ந்தெடுக்கிறேன் என்றால், நீங்களே யோசித்துப் பாருங்கள், இவர்கள் அவர்களுடைய பிரைம் பார்மில் இருந்தால் எப்படி இருக்கும்?”
இதையும் படிங்க : ஆர்சிபி அணிக்கு ஏற்பட்ட திடீர் பிரச்சனை.. ஒரு வீரரை பார்த்து இவ்வளவு பயமா?.. மாறிய வெற்றி மனநிலை
“யுவராஜ் சிங் 6 சிக்ஸர்கள் அடிக்கும் பொழுது வேறு யாரையும் பார்க்க நினைக்க மாட்டோம். ஆனால் இதில் விஷயம் என்னவென்றால் நாம் இதில் யாரை தேர்ந்தெடுக்க முடியும்? இதில் நாம் ஒருவரை மட்டுமே ரசிக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் மிகச் சிறப்பான முறையில் இந்திய கிரிக்கெட் பங்களிப்பு கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் யார் விளையாடுவதை பார்த்தாலும் மிகவும் அருமையாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.