நாளை மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் முக்கிய போட்டி நடைபெற இருக்கிறது. தற்போது இந்த போட்டி குறித்து ஒரு முக்கியமான செய்தி வெளியாகியிருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தின் முடிவில் மிக வலிமையான அணியாக பலராலும் கணிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அந்த அணி விளையாடியிருக்கும் நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளை தோற்று பின்தங்கி இருக்கிறது. அதே சமயத்தில் ஆர்சிபி அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்று முன்னணியில் இருக்கிறது.
சோகமாக மாறும் சொந்த மைதானங்கள்
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு மிகவும் சாதகமான சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் வெற்றி பெற முடியாத அளவுக்கு கடினமாக மாறி இருக்கிறது. இதேபோல் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்று தனது சொந்த மைதானத்தில் முதல் முறையாக விளையாடிய போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோற்றது.
இதேபோல் ஆர்சிபி அணி விளையாடிய முதல் 2 போட்டிகளில் வென்று, நடப்பு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக தங்களது சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு திரும்பி குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் படுதோல்வி அடைந்தது. இந்த வகையில் சில அணிகளுக்கு சொந்த மைதானம் திடீரென பிரச்சனை கொடுக்கக் கூடியதாக மாறியிருக்கிறது.
திரும்பி வரும் முக்கிய வீரர்
தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பும்ரா நாளை ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மகிழ்ச்சியை தந்தாலும் ஆர்சிபி அணிக்கு திடீரென வெற்றி மனநிலையில் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஓய்வு பெறுவது குறித்து யோசிக்கவே இல்லை.. அடுத்த ஐபிஎல் சீசன் விளையாடுவது குறித்து 10 மாதத்தில் முடிவு- தோனி அறிவிப்பு
ஆர்சிபி முதல் இரண்டு போட்டிகளை சிறப்பாக விளையாடி வென்றாலும் கூட, மூன்றாவது போட்டியில் சொந்த மைதானத்தில் தோல்வி அடைந்தது. மேலும் நாளை மிக முக்கியமான போட்டியில் எதிரணியின் முக்கிய வீரர் பும்ரா திரும்பி வருவது, ஆர்சிபி அணியின் தன்னம்பிக்கையில் பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு வீரரை பார்த்து இவ்வளவு பயம் எதற்காக? என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.






