தோனி ரோகித் சர்மா யாருக்கு பந்து வீசுவது கடினம்? இவரை விட சிறந்த வீரர் யாருமே கிடையாதுங்க! – ஹர்பஜன் சிங் ஆச்சரிய பதில்!

0
9068
Harbhajan

ஹர்பஜன்சிங் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களில் மிகவும் முக்கியமான வீரர் ஆவார். மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணிகளில் இடம் பெற்றிருந்தார்!

ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் 2008 முதல் 2017 வரை விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற பொழுது அணியில் இருந்தார்.

- Advertisement -

இதற்கடுத்து ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2018 முதல் 2020 வரை விளையாடினார். இது 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

மகேந்திர சிங் தோனி மற்றும் ரோகித் சர்மா தலைமையில் விளையாடி உள்ள ஹர்பஜன் சிங் இருவரில் யாருக்கு தான் பந்து வீசியதில் கடினமாக இருந்தது என்று ஆச்சரியமான ஒரு கருத்தை பகிர்ந்து இருக்கிறார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” ரோகித் சர்மாவுக்கு எந்த நாளிலும் எந்த நேரத்திலும் பந்து வீசுவது மிகவும் கடினமான ஒரு வேலை. மகேந்திர சிங் தோனிக்கு எதிராக நான் அதிகம் பந்து வீசவில்லை. ஏனென்றால் அவர் பேட்டிங் செய்ய வருவதற்குள் என்னுடைய ஸ்பெல் முடிந்துவிடும். ஆனால் நான் அவருக்கு எவ்வளவு குறைவாக பந்துவீசி இருந்தாலும் அவரை ஆட்டம் இழக்கச் செய்திருக்கிறேன். அவர் மிகவும் ஆபத்தான வீரராக இருந்தார். ஆனால் அவருக்கு அதிகம் வீச முடியாதபடி எனது ஓவர்கள் முன்பே முடிந்திருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய ஹர்பஜன்சிங்
” ஆனால் ரோகித் சர்மாவை வைத்து ஒட்டுமொத்தமாக பேசினால் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பேட்டிங் திறமையை பொறுத்தவரையில் அவர் ஒரு கிளாஸ் பிளேயர். தோனி வீரர்களில் ஒரு ஆபத்தானவராக இருந்தார். அவர் ஒரு பினிஷர். ஆனால் ரோஹித் ஆரம்பம் முதல் இறுதி வரை பேட் செய்தால் அவரைவிட சிறந்த வீரர் யாருமே கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!