தோனி ஓய்வுக்கு பிறகு என்ன?.. சிஎஸ்கே போட்ட மாஸ்டர் பிளான்.. வேற லெவல் திங்கிங்!

0
13301
Dhoni

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான். ஐந்து கோப்பைகளை வென்ற நிலையில் அவரே முதன்மையான கேப்டனாக ஐபிஎல் தொடரில் இருக்கிறார்.

42 வயதை தாண்டும் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடக்கவும் அதிக வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு மட்டுமல்லாது அவர்களுக்கு என்று இருக்கும் தனித்த அணி கலாச்சாரத்திற்கு மகேந்திர சிங் தோனியின் முக்கிய பங்கு உண்டு. அவரது இடத்தை களத்திற்கு உள்ளும் வெளியிலும் நிரப்புவது என்பது சற்று கடினமான விஷயமே.

இதுவரை ஐபிஎல் தொடரை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை எடுத்துப் பார்த்தால் மிகப்பெரிய அணியாக இருந்திருக்காது. வீரர்களுக்கான சுதந்திரம் மற்றும் சிறப்பான முறையில் வழிநடத்துதல் மூலமாக அவர்கள் கோப்பையை வென்று இருக்கிறார்கள்.

நாளை புதிய ஒரு கேப்டன் வரும்பொழுது அணியை இதே அளவில் சராசரியாக வைத்திருக்க முடியாது. எனவே அணியை பலப்படுத்திதான் புதிய கேப்டனுக்கு கொடுக்க வேண்டியதாக இருக்கும். இதை உணர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய ஏல அணுகுமுறையை இந்த முறை மாற்றி இருக்கிறது.

- Advertisement -

பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அனுபவ வீரர்களின் மேல்தான் அதிக முதலீட்டை செய்யும். ஆனால் இந்த முறை சூழ்நிலையை புரிந்து, அறிமுகவீரர் 20 வயதான சமீர் ரிஸ்விக்கு 8.40 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. அம்பதி ராயுடு இடத்துக்கு மட்டுமல்லாமல், இளம் இந்திய வீரர் தேவை என்பதற்காகவும் இவர் வாங்கப்பட்டு இருக்கிறார்.

அதேசமயத்தில் அம்பதி ராயுடு இடத்தை வழக்கம்போல் மற்றுமொரு இந்திய வீரரை வைத்து, அதாவது கருண் நாயர் மனிஷ் பாண்டே போன்றவர்களை வைத்து நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக வெளிநாட்டு வீரரான நேரில் மிட்சலை வைத்து நிரப்பி இருக்கிறார்கள்.

இப்படி இந்த ஆண்டு தோனியின் ஓய்வை மனதில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தன்னுடைய பழைய அணுகுமுறையில் இருந்து மாறி புதிய அணுகுமுறையில் அணியை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறது. இவர்களது திட்டம் ஏலத்திலும் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. களத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்!