14 வருஷத்துல 12 பிளே-ஆப்… சிஎஸ்கே அணியால் மட்டும் எப்படிங்க முடியுது? – தல தோனி அட்டகாசமான பதில்!

0
2989

14 சீசன்களில் 12 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள சிஎஸ்கே அணியால் எப்படி இது முடிகிறது என்று கேள்வி எழுப்பிய தொகுப்பாளருக்கு அட்டகாசமான பதிலை கொடுத்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 223 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதனை சேஸ் செய்த டெல்லி அணிக்கு வார்னர் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் விதமாக பேட்டிங் செய்தார். மற்ற வீரர்கள் சொற்பரன்களுக்கு சிஎஸ்கே பந்துவீச்சாளர்களிடம் ஆட்டமிழக்க டெல்லி அணி 146 ரன்களுக்குள் சுருண்டது. சிஎஸ்கே அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வலுவாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து இருக்கிறது.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த வெற்றி பெற்ற அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம், சிஎஸ்கே அணி 14 வருடங்களில் 12 முறை பிளே-ஆப் சுற்றுக்குள் சென்றிருக்கிறது! எப்படி இதுபோன்று வெற்றிகரமாக செயல்பட முடிகிறது?என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய தோனி,

“இதற்கென்று தனி சூத்திரம் எதுவும் இல்லை. அணியில் வீரர்களுக்கு அவர்களது பலத்திற்கு ஏற்றவாறு ரோல்கள் கொடுக்கப்படுகிறது. மேலும் அவர்களது பலவீனம் தெரிந்து அதில் வளர்ச்சி அடைய பயிற்சிகளும் உரிய கவனமும் செலுத்தப்பட்டு வருகிறது. சில வீரர்கள் சில இடங்களை தியாகம் செய்து மற்ற இடங்களிலும் விளையாட வேண்டிய சூழலும் இருக்கும். அதற்கு தகவமைத்துக் கொள்கின்றனர்.

- Advertisement -

இவை அனைத்திற்கும் மேலாக அணியில் இருக்கும் பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி வரும் உதவியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது தான் இதற்கு காரணமாக பார்க்கிறேன்.” என்றார்.

“டெத் பௌலிங் முக்கியம் என்று பார்க்கிறேன். பத்திரனா அவரது வேலையை சிறப்பாக செய்து வருகிறார். துஷார் தேஷ்பாண்டே தன்னை நன்றாக வளர்த்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்று அணிக்காக செயல்படும் வீரரே தேவை. ஒவ்வொரு போட்டியிலும் தனிப்பட்ட முறையில் நன்றாக செயல்பட்டிருக்கிறார் என்று நாங்கள் பார்ப்பதில்லை. அணியுடன் சேர்ந்து எப்படி செயல்படுகிறார்? கொடுக்கப்படும் ரோலுக்கு சரி வருவார்களா? என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.” என்றும் பேசினார்.