தோனி எந்த இடத்தில் இருக்கிறார்.. ஐபிஎல் வரலாற்றில் 20ஆவது ஓவரில் அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியல்!

0
289

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 20ஆவது ஓவரில் அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலை பின்வருமாறு காண்போம்.

ஐபிஎல் கிரிக்கெட், 2008 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது 2023 ஆம் ஆண்டு வரை 15 சீசன் முடிவடைந்து 16வது சீசன் நடைபெற்று வருகிறது. இதுவரை எண்ணற்ற பல சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.

- Advertisement -

ஆனால் அவற்றில் எவரும் முறியடிக்க முடியாத அளவிற்கு சில சாதனைகளை மகேந்திர சிங் தோனி படைத்திருக்கிறார். குறிப்பாக பினிஷிங் ரோலில் களமிறங்கும் தோனி, 20 ஆவது ஓவரில் படைத்த பல சாதனைகள் எவரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது. அவற்றை ஒன்றபின் மற்றொன்றாக பார்ப்போம்.

இந்த வருட ஐபிஎல் சீசனில் முழுக்க முழுக்க ஃபினிஷிங் ரோலில் தோனி விளையாடி வருகிறார். விளையாடிய நான்கு லீக் போட்டிகளில் மூன்று இன்னிங்க்ஸில் இருபதாவது ஓவர் களமிறங்கி அசத்தினர்.

இந்த சீசன் மட்டுமே மூன்று முறை இருபதாவது ஓவரில் பேட்டிங் செய்து, ஐந்து சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் உட்பட,13 பந்துகளை எதிர் கொண்டு 38 ரன்கள் அடித்து கிட்டத்தட்ட 300 ஸ்ட்ரைக் கேட்டில் விளையாடியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 89 இன்னிங்ஸ்களில் இருபதாவது ஓவரில் பேட்டிங் செய்துள்ள தோனி, 693 ரன்கள் அடித்து எவரும் நெருங்க முடியாத உச்சத்தில் இருக்கிறார். இதில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 245.74 ஆகும். 20ஆவது ஓவரில் மட்டுமே இதுவரை 57 சிக்ஸர்கள், 45 பவுண்டர்களை தோனி அடித்திருக்கிறார்.

இவருக்கு அடுத்த இடத்தில் 405 ரன்களுடன் கீரன் பொல்லார்ட் இருக்கிறார். ஜடேஜா 311 ரன்கள் அடித்து இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இருபதாவது ஓவரில் பல சாதனைகளை நெருங்க முடியாத அளவிற்கு படைத்திருக்கும் தோனி, இதுவரை 20வது ஓவரில் 57 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்தடுத்த இடத்தில் இருக்கும் வீரர்களை பின்வருமாறு காண்போம்.

ஐபிஎல் வரலாற்றில் இருபதாவது ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியல்:

  1. மகேந்திர சிங் தோனி – 57 சிக்ஸர்கள்
  2. கீரன் பொல்லார்ட் – 33 சிக்ஸர்கள்
  3. ரவீந்திர ஜடேஜா – 26 சிக்ஸர்கள்
  4. ஹர்திக் பாண்டியா – 25 சிக்ஸர்கள்
  5. ரோகித் சர்மா – 23 சிக்ஸர்கள்