தோனியின் பழைய வேலைக்கான அப்பாயின்மென்ட் லெட்டர் வைரல்.. ஆச்சரியப்பட வைக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
6830

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காமல் இடம் பிடித்திருப்பவர் மகேந்திர சிங் தோனி. 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முதன்முதலில் விளையாடிய இவர் கேப்டனாக பொறுப்பேற்று 2007 ஆம் ஆண்டு t20 உலக கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார் .

இதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை மற்றும் பங்களாதேஷில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இரண்டாவது முறையாக இந்தியாவிற்கு சாம்பியன் பட்டம் வாங்கிக் கொடுத்தவர். மேலும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பையும் இந்திய அணி எம் எஸ் தோனி தலைமையில் கைப்பற்றியது.

- Advertisement -

மேலும் சிஎஸ்கே அணிக்காக 2023 ஆம் ஆண்டின் சாம்பியன் பட்டத்தோடு இதுவரை ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று இருக்கிறது மேலும் சிஎஸ்கே அணிக்காக இரண்டு சாம்பியன்ஷிப் கோப்பைகளையும் வென்று கொடுத்திருக்கிறார் எம்எஸ் தோனி. இந்திய கேப்டன்களிலேயே மிகவும் வெற்றிகரமான கேப்டனாக அறியப்படும் இவர் இந்திய அணிக்காக பேட்டிங்கின் மூலமும் பல வெற்றிகளை தேடி தந்தவர். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இவர் அடித்த 91 ரன்கள் எந்த ரசிகர்களாலும் மறக்க முடியாது .

மகேந்திர சிங் தோனியின் மொத்த சொத்து மதிப்பு 1040 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது. மேலும் தோனி கிரிக்கெட் விளையாடிய காலம் முதலே பல்வேறு விதமான விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார் . பல நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடர் ஆகவும் இருந்துள்ளார் . பிசிசிஐ வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் ஏ ப்ளஸ் கிரேடில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் முதல் எலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணி கடந்த 16 சீசன்களிலும் எம் எஸ் தோனியை தக்க வைத்து இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக சம்பளத்தை பெரும் வீரராக இருந்து வருகிறார் தோனி . இந்நிலையில் தோனியின் பழைய அப்பாயின்மென்ட் ஆர்டர் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது . இந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தற்போது வைரலாகியும் வருகிறது.

- Advertisement -

2012 ஆம் ஆண்டு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தோனிக்கு வழங்கிய அப்பாயின்மென்ட் ஆர்டர் தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது. சிஎஸ்கே அணியை இந்த நிறுவனம்தான் வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடெண்ட் பதவிக்காக தோனிக்கு வழங்கப்பட்ட அப்பாயின்மென்ட் ஆர்டர் அது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரில் தோனிக்கு வழங்குவதாக குறிப்பிடப்பட்ட சம்பளம் தான் அனைவரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது . அந்த வேலை வாய்ப்பிற்கான படிவத்தில் தோனிக்கு சம்பளமாக மாதம் 43 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2012 காலகட்டத்தில் தோனி கிரிக்கெட்டில் பல நூறு கோடிகளை சம்பாதித்துக் கொண்டு இருந்தார் . அப்போது தோனிக்கு வரும் 43 ஆயிரம் ரூபாய் தான் சம்பளமாக கொடுக்கப்பட்டதா என ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். முன்னாள் ஐபிஎல் இயக்குனரான லலித் மோடி 2017 ஆம் ஆண்டு இந்த அப்பாயின்மென்ட் ஆர்டர் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார். இது தற்போது மீண்டும் வைரலாகி இருக்கிறது.