“தோனி உலக கோப்பையில் எங்களை ஒன்னு செய்ய வச்சார்.. அதை இப்ப நீங்க செய்யுங்க!” – சேவாக் சொன்ன அசரடிக்கும் விஷயம்!

0
5884
Dhoni

இந்திய அணி கடைசியாக 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை மகேந்திர சிங் டோனி தலைமையில் கைப்பற்றியது!

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் விளையாடிய வீரர்களில், தற்பொழுது விராட் கோலி மட்டுமே 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து வருகிறார். அஸ்வின் இடம் பெற்றால் அவர் இரண்டாவது வீரராக இருப்பார்.

- Advertisement -

அந்தக் குறிப்பிட்ட உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இடம் பெற்றிருந்தார்கள். உலகத்தின் அதிசிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் ஷேவாக் மற்றும் சச்சின் இருந்தார்கள்.

மேலும் இடது கை ஆட்டக்காரர்களாக சிறப்பான கம்பீர், யுவராஜ் சிங், ரெய்னா இருந்தார்கள். பகுதி நேர பந்துவீச்சாளர்கள் 15 பேர் கொண்ட அணியில் 5 பேர் இருந்தார்கள். சுழற் பந்துவீச்சுக்கு ஹர்பஜன் மற்றும் அஸ்வின், வேகப்பந்து வீச்சுக்கு இடது கை ஜாகீர் மற்றும் நெக்ரா என எல்லா வீரர்களும் சிறந்தவர்கள்.

தற்பொழுது அந்த உலகக் கோப்பை தொடருக்கு தாங்கள் எப்படி தயாராகினோம்? அதற்கு மிக முக்கியமாக என்னவெல்லாம் செய்தோம்? என்பது குறித்து சேவாக் தற்போது கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சேவாக் கூறும் பொழுது
“நாங்கள் உலகக் கோப்பைக்கு தயாராவது குறித்து ஒரு குழு சந்திப்பை நடத்திய பொழுது, நாங்கள் செய்தித்தாள்களை படிக்க மாட்டோம், வெளிப்புற சத்தத்தை கேட்க மாட்டோம், அழுத்தத்தை அதிகரிக்கும் எதையும் செய்ய மாட்டோம் என்று முடிவு செய்தோம். இது ஒரு விதியாகவே மாறியது.

இந்த விதியை கிட்டத்தட்ட அனைவரும் பின்பற்றினார்கள். நாங்கள் ஒன்றாக இருந்தோம். அணியை கட்டுவதில் நாங்கள் மகிழ்ச்சியாக வேலை செய்தோம். ஏனெனில் இதுபோன்ற போட்டிகளில் வீரர்கள் பிரிந்து செல்வது எளிதானது. தாங்கள் எப்பொழுதும் ஒன்றாக இருப்பதை மகேந்திர சிங் தோனி மற்றும் கேரி கிரிஸ்டின் இருவரும் பார்த்துக் கொண்டார்கள்.

போட்டிகளுக்கு முன்னும் பின்னும் நாங்கள் ஒன்று கூடினோம். நாங்கள் பெரும்பாலும் கிரிக்கெட்டை பற்றி பேசுவோம். இரவு உணவு நேரத்தில் போது கிரிக்கெட்தான் தலைப்பாகவே இருக்கும். நானும் ஆலோசனைகள் சொல்வேன். இதுதான் நாங்கள் உலகக் கோப்பையை வென்றதற்கு மிக முக்கியமான காரணம்.

நிச்சயமாக எங்களுக்கு அழுத்தம் இருந்தது. நாங்கள் ஹோட்டல் மற்றும் விமான நிலையம் என்று எங்கு சென்றாலும் அங்கு இருப்பவர்கள் எங்களை உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் எம்எஸ்.தோனியிடம் வேறு ஒரு விஷயம் இருந்தது. அவர் செயல் முறையில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்றார். நாங்கள் செயல்முறையில் கவனம் செலுத்தினோம்!” என்று கூறியிருக்கிறார்!