தோனி எல்லார் கூடவும் உறவை வளர்த்த ஒரு வழி வைத்திருப்பார்; அவருக்கு எல்லாரைப் பற்றியும் எல்லாமும் தெரியும் ; அதுதான் அவரை தலைவராக்கியது – கே.எல்.ராகுல் மனம் திறந்த நீண்ட பேட்டி!

0
378
Rahul

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டாலும், ஐபிஎல் தொடரில் இப்பொழுது விளையாடு வரும் வரை அவர் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரராகவே இருந்து வருகிறார்!

மகேந்திர சிங் தோனி குறித்து அவருடன் விளையாடிய ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய அனுபவங்களையும் அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்தும் நிறைய பேசி வருகிறார்கள்.

- Advertisement -

இந்திய வீரர்கள் மட்டுமல்லாது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து விளையாடிய வெளிநாட்டு வீரர்களும் அவர் குறித்த அருமையான நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த வகையில் மகேந்திர சிங் தோனி குறித்து கே எல் ராகுல் பேசும் பொழுது
“தோனி எனது முதல் கேப்டன். அவர் அணியை எப்படி கையாண்டார்? மற்றும் திரைக்குப் பின்னால் அவர் செய்த வேலைகளை நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொருவரிடமும் அவர் உறவை உருவாக்கும் முறையை நான் அவரிடம் இருந்து கற்று இருக்கிறேன். நீங்கள் இதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்தச் சிறுவர்கள் உங்களுக்காக களத்தில் சண்டை இடும் வீரர்கள். எனவே நீங்கள் உறவை வளர்த்த வேண்டும்.

அவர் ஓய்வு பெற்ற பிறகு அவர் டிரெஸ்ஸிங் ரூமில் இல்லாததை நான் அதிகம் உணர்ந்தேன். அந்த மனிதரின் இருப்பையும், அவரது ஒரு அங்கமாக நான் இருந்த பெருமையையும் உணர்ந்தேன்.டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பது ஒவ்வொரு கிரிக்கெட் பிரியர்களின் கனவாக இருக்கலாம்.

- Advertisement -

தோனி கேப்டனாக தனது அணுகு முறையில் மிகவும் எளிமையானவர். நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்கும். களத்திலும் அவர் அமைதியானவர். அவர் இப்படி இருப்பது மட்டுமல்ல எல்லா விஷயத்திலும் சமநிலையானவர்.

ஒவ்வொரு நபருடனும் உறவை வளர்ப்பதற்கான வழிமுறைகள் அவருக்கு உள்ளன. அவருக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வழி இருக்கிறது. மேலும் ஒவ்வொருவரின் விளையாட்டிலும் என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரியும். ஒவ்வொருவரை பற்றியும் எல்லா விஷயமும் அவருக்கு தெரியும். அதுதான் அவரை இவ்வளவு பெரிய தலைவர் ஆக்கியது.

ஒரு கேப்டனாக நீங்கள் உங்கள் தைரியத்தை நம்புங்கள் என்று அவர் என்னிடம் கூறியிருக்கிறார். உங்களுக்கு முதலில் ஒரு சிந்தனை தோன்றும் ஆனால் நீங்கள் அதை அதிக கேள்வி கேட்பீர்கள். ஆனால் தோனி தனக்கு உண்டாகும் முதல் எண்ணத்தின் மீது அதிக கேள்வி கேட்க மாட்டார்.

ஒரு விஷயத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தால் அவர் அதன் மீது எந்த கேள்வியையும் கேட்க மாட்டார். இரண்டாவதாக ஒன்றை யூகிக்க மாட்டார். அது நன்றாக நடந்தாலும் சரி நடக்காவிட்டாலும் சரி அவர் அதைத்தான் செய்வார். அதுதான் அவருக்கு நிறைய உதவி இருக்கிறது.

அதனால் தான் அவர் பல வழிகளில் வழக்கத்திற்கு மாறானவராக இருந்தார்.இது மக்களுக்கு அப்போது புரியவில்லை. ஆனால் அவர் தனது உள்ளுணர்வை நம்பினார். அதனால்தான் அவருக்கும் பலன் கிடைத்தது!” என்று கூறியிருக்கிறார்!