தோனி ஜடேஜாவின் போராட்டம் வீண்; பரபரப்பான ஆட்டத்தில் வென்றது ராஜஸ்தான்!

0
264
CSK

ஐபிஎல் 16ஆவது சீசனில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு சென்னை அணியின் கேப்டனாக இருநூறாவது போட்டியாகும்!

- Advertisement -

ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 10 ரன்கள், படிக்கல் 38 ரன்கள், சஞ்சு சாம்சன் 0, அஸ்வின் 31 ரன்கள், பட்லர் 52 ரன்கள், துருவ் ஜுரல் 4 ரன்கள், ஆடம் ஜாம்பா 1 ரன், சிம்ரன் ஹெட்மையர் 30* ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 175 ரன்கள் எடுத்தது. நான்கு ஓவர்களுக்கு 21 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜா கைப்பற்றினார்.

இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு இந்த முறை ருத்ராஜ் 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ரகானே சிறப்பாக விளையாடி 31 ரன்கள் எடுத்தார். சிவம் துபே 8 ரன், மொயின் அலி 7 ரன், அம்பதி ராயுடு 1 ரன், கான்வே 50 ரன் என எடுத்து வெளியேறினார்கள்.

ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் தோனி காலத்தில் இருக்க கடைசி இரண்டு ஓவர்களுக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. ஜேசன் ஹோல்டர் பேசிய 19 ஆவது ஓவரில் 19 ரன்கள் வந்தது. ஜடேஜா இரண்டு சிக்ஸர்கள் எடுத்தார்.

- Advertisement -

இருபதாவது ஓவரை சந்திப் ஷர்மா வீசினார். முதல் மூன்று பந்துகளில் மகேந்திர சிங் தோனியின் இரண்டு சிக்ஸர்கள் மூலம் 14 ரன்கள் வந்தது. கடைசி மூன்று பந்துகளுக்கு ஏழு ரன்கள் மட்டும் தேவைப்பட்டது. ஆனால் இந்த மூன்று பந்துகளிலும் மூன்று சிங்கிள் ரன்கள் மட்டுமே சென்னை அணியால் எடுக்க முடிந்தது. இதனால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்காவது வெற்றியை ஐந்தாவது ஆட்டத்தில் பதிவு செய்தது. சென்னை அணிக்கு இது நான்காவது ஆட்டத்தில் இரண்டாவது தோல்வி ஆகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் நான்கு ஓவர்களுக்கு அஸ்வின் 25 ரன்கள் மற்றும் சாகல் 27 ரன்கள் மட்டும் தந்து தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்கள். சென்னை அணி குறிப்பாக மொயின் அலி பீல்டிங்கில் சொதப்பியது சென்னை அணிக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. மேலும் சென்னை அணியின் இடது கை பேட்ஸ்மேன்கள் ராஜஸ்தான் அணியின் லெக் ஸ்பின்னர்களை அடித்து விளையாட தவறி விட்டார்கள். ஆனாலும் கடைசி கட்டத்தில் தோனி ஜடேஜா ஜோடி ஆட்டத்தை முடிந்தவரை நெருக்கமாக எடுத்து வந்தே தோற்று இருக்கிறது. வென்று இருந்தால் இது மகேந்திர சிங் தோனிக்கும், சென்னை ரசிகர்களுக்கும் மறக்க முடியாத போட்டியாக இருந்திருக்கும்!