தோனி என் பின்னால் நின்று நான் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார் அதுவே எனக்குப் போதும் – துருவ் ஜுரல் நெகிழ்ச்சி!

0
296
Jurel

நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ராஜஸ்தானின் சவாய் மான்சிங் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் அதிகபட்ச இந்த மைதானத்தின் ரண்களை நேற்று ராஜஸ்தான் ராயல் அணி பதிவு செய்தது. 202 ரன்களை எடுத்து சென்னை அணியை 170 ரன்களுக்கு ராஜஸ்தான் அணி கட்டுப்படுத்தியது.

முதலில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 43 பந்துகளில் 77 ரன்கள் எடுக்க, இறுதியில் வந்த மற்றும் ஒரு இளம் வீரர் துருவ் ஜுரல் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அணி 200 ரன்களை எட்டுவதற்கு உதவி செய்தார்.

நேற்றைய போட்டிக்குப் பிறகு பேசி உள்ள துருவ் ஜுரல் ” தோனி உடன் ஒரே களத்தை பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர் விளையாடுவதை சிறு வயதிலிருந்து நான் பார்த்து வருகிறேன். எனக்கு இது எந்தவித அழுத்தமும் இல்லை. மாறாக எனக்கு உந்துதலாகவே இருக்கிறது. அவர் என் பின்னால் நின்று நான் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார் எனக்கு அதுவே போதும்.

- Advertisement -

அணி நிர்வாகம் எனக்கு பினிஷர் ரோல் கொடுத்திருக்கிறது. நான் அதற்கேற்றபடி எனது பயிற்சியை அமைத்து செய்து வருகிறேன். நான் எனக்கு குறைவான பந்துகள்தான் கிடைக்கிறது என்று நினைக்கவில்லை. நான் பெரிய ரன்களையே எடுக்க முயற்சி செய்கிறேன். நான் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிக்க வேண்டும்.

நான் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு மணி நேரம் பேட்டிங் செய்கிறேன். எனது பேட்டிங்கில் இருந்து ஏதாவது எனக்கு கிடைக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறேன். எனது மந்திரம் பேட். மீதியை தானே பார்த்துக் கொள்ளும்!” என்று கூறியிருக்கிறார்!