தோனி விராட் கோலி கிடையாது.. இவர் தான் ஐபிஎல் கிங் ரிங்கு சிங் பரபரப்பான நெகிழ்ச்சியான கருத்து!

0
1024
Rinkusingh

இந்திய கிரிக்கெட் அணி தற்போது பெரிய மாற்றங்களுக்கு உள்ளாக இருக்கிறது. மூத்த வீரர்களுக்கு பதிலாக இளைய வீரர்கள் உள்ளே வருவதற்கான காலக்கட்டமாக இது இருக்கிறது!

தற்போது இந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், இஷான் கிஷான், முகேஷ் குமார், திலக் வர்மா போன்ற இளம் வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா போன்ற இளம் வீரர்கள் மேலும் சில புதிய வீரர்களோடு இடம்பெற்று இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் வளர்ந்து வரும் ஆசிய வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மா, சாய் சுதர்சன், துருவ் ஜுரல், நிஷாந்த் சிந்து ஹர்ஷித் ராணா போன்ற இளம் வீரர்கள் வேகமாக உருவாகி வருகிறார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இளம் இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங்குக்கு தற்பொழுது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் தரப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 80 லட்சம் ரூபாய்க்கு ரிங்கு சிங் வாங்கப்பட்டார். தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் கொல்கத்தா அணியில் இடம் பெற்று வந்தார்.

இதற்கு அடுத்து 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா இடத்தில் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 25 லட்ச ரூபாய்க்கு பழைய விலையை விட குறைவாக 55 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

ஆனாலும் அந்த ஆண்டு இவர் தன்னை ஓரளவு வெளிப்படுத்திக் கொள்ள லக்னோ அணி உடனான ஒரு போட்டி உதவியது. அதற்கு அடுத்து இந்த ஆண்டு குஜராத் அணி உடன் இவர் கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸர்களை தொடர்ந்து அடித்து அணியை வெற்றி பெற வைக்க இவரது திறமை என்னவென்று முழு உலகிற்கும் வெளிப்பட்டு விட்டது.

இவரது மொத்த பேட்டிங் திறமை குறித்தும் எல்லோராலும் அலசப்பட்டு, இவருக்கு இந்திய அணியில் சீக்கிரம் வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் 14 போட்டிகளில் நான்கு அரை சதங்கள் உடன், 474 ரன்களை, 59 ஆவரேஜில் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து அசத்தியிருந்தார்.

தற்போது இவருக்கு உதவி செய்த இந்திய முன்னாள் வீரர்கள் குறித்து இவர் கூறுகையில் ” சுரேஷ் ரெய்னா எனது ரோல் மாடல். நான் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். அவர்தான் ஐபிஎல் கிங். அவர் தன்னுடைய அனுபவத்தை தொடர்ந்து என்னுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் எனக்கு நிறைய உதவிகளை வாழ்க்கையில் செய்திருக்கிறார்.

ஹர்பஜன் சிங் பஜ்ஜிப்பாவும் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். இப்படி என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. நான் அவர்களது ஆதரவிற்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன். இது போன்ற பெரிய வீரர்கள் உங்களைப் பற்றி பேசும்பொழுது, அது நீங்கள் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு ஒரு பெரிய தூண்டுதலாக அமைகிறது!” என்று கூறியிருக்கிறார்!