கேப்டன்ஷியில் அடுத்த தோனி ஹர்திக் பாண்டியா கிடையாது ; இந்தப் பையன்தான்! – ரவி சாஸ்திரி ஆச்சரியமான கருத்து!

0
2302
Ravi

இந்திய கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக, பேட்டிங்கில் பினிஷராக, விக்கெட் கீப்பராக மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியவர் மகேந்திர சிங் தோனி!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இவர் ஓய்வு பெற்ற பின்பு இவர் இடத்தை ஒவ்வொன்றிலும் நிரப்பக் கூடியவர்கள் யார் என்பது இந்திய கிரிக்கெட்டில் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த வகையில் கேப்டன்ஷியில் அடுத்த மகேந்திர சிங் தோனி யார் என்கின்ற விவாதங்கள் போய்க் கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் சிலர் தங்களை அடுத்த மகேந்திர சிங் தோனியாக கேப்டன் பொறுப்பில் காட்டிக் கொள்வதற்கான முயற்சியும் நடக்கும்.

இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, அதற்கு முன்பே கடந்த வருடம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட பொழுதே, தான் கேப்டன்ஷியில் மகேந்திர சிங் தோனியை பிரதிபலிப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கேப்டன்ஷிக்கான பொறுப்பில் அடுத்த மகேந்திர சிங் தோனி யார் என்பதை இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறும் பொழுது ” நான் சஞ்சு சாம்சன் இடம் இருக்கும் விஷயங்களை பார்த்தது குறைவு. அவர் மிகவும் காம் அண்ட் காம்போஸ் ஆக இருக்கிறார். அவர் இதை வெளிப்படுத்தாவிட்டாலும் வீரர்களுடன் நல்ல தொடர்பிலும் இருக்கிறார். அவர் இந்த வேலையை எந்த அளவிற்கு அதிகமாக செய்கிறாரோ அந்த அளவிற்கு அனுபவத்துடன் கற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன்.

அவரிடம் நான் மகேந்திர சிங் தோனியிடம் இருக்கும் குணாதிசயங்களை பார்க்கிறேன். அவரிடம் உள்ளார்ந்த ஒரு தலைவர் இருக்கிறார். மேலும் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் மகிழ்ச்சியாக இல்லை.

அவர் அதை வெளிப்படுத்தாவிட்டாலும் அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான் உண்மை. அந்த இரண்டு போட்டிகளில் ஒன்றையாவது அவர்கள் தங்களின் பேட்டிங் பலம் மூலம் வென்று இருக்க முடியும்!” என்று கூறியிருக்கிறார்!