வெறும் 3 போட்டிகள் ஆடியதை வைத்தே நான் உலகக் கோப்பை அணியில் இருப்பேன் என தோனி உறுதி செய்தார் – இளம் இந்திய வீரர் நெகிழ்ச்சி

0
170

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி பின்னர் இந்திய அணியில் நுழைந்து மோஸ்ட் வான்டட் ஆல்ரவுண்டர் வீரராக ஹர்திக் பாண்டியா வளர்ந்திருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் சென்னையில் கேப்டனாக ஒரு வீரராக மிக சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய வளர்ச்சி மிக அபாரமானது.

அவர் தற்பொழுது தான் முதன் முதலில் விளையாடிய சர்வதேச டி20 போட்டி குறித்து நிறைய விஷயங்களை தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் மகேந்திர சிங் தோனி குறித்து நிறைய விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் அறிமும்

இன்று இந்திய அணியில் ரோஹித் சர்மா விராட் கோலி ரவிச்சந்திரன் அஸ்வின் ஜஸ்பிரித் பும்ரா ரவீந்திர ஜடேஜா என ஏகப்பட்ட வீரர்கள் மகேந்திர சிங் தோனி தலைமையின்கீழ் அறிமுகமானவர்கள் தான். அவர்கள் அனைவரும் தற்போது இந்திய அணியில் முன்னணி கிரிக்கெட் வீரர்களாக உள்ளனர்.

2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா மகேந்திர சிங் தோனி தலைமையில் தன்னுடைய முதல் போட்டியில் விளையாடினார்.

- Advertisement -

நான் இந்திய அணியில் நுழைந்த பொழுது சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், எம்எஸ் தோனி, விராட் கோலி, ஆஷிஷ் நெஹ்ரா போன்ற முன்னனி வீரர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் பார்த்து தான் நான் விளையாடினேன். அவர்களுடன் இணைந்து விளையாட போகிறேன் என்பதே எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது.

மகேந்திர சிங் தோனி என் மீது வைத்த நம்பிக்கை

முதல் போட்டியில் முதல் ஓவர் நான் வீசியபோது எதிரணிக்கு 21 ரன்கள் கொடுத்துவிட்டேன். வேறு கேப்டனாக இருந்து இருந்தால் நிச்சயமாக அதன் பின்னர் எனக்கு பந்து வீச வாய்ப்பு கிடைத்திருக்காது. நல்லவேளை நான் எம்எஸ் தோனி தலைமையின் கீழ் அறிமுகமானேன். அவர் எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். (அந்தப் போட்டி முடிவில் அவர் 3 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், அதாவது அடுத்த இரண்டு ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருக்கிறார்).

அதுமட்டுமின்றி மூன்று போட்டிகள் தொடர்ந்து எனக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று போட்டிகளில் நான் பேட்டிங் விளையாடவில்லை பந்து மட்டுமே வீசினேன். மூன்றாவது போட்டியின் முடிவிலேயே இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் உலக கோப்பை டி20 தொடரில் நிச்சயம் இடம் பெறுவார் என்று என்னிடம் வாக்களித்தார். நீ விளையாடிய விதம் உன்னை நீ காண்பித்துக் கொண்டு விதம் அற்புதமாக இருக்கிறது என்று என்னை வெகுவாக பாராட்டினார்.

மூன்றாவது போட்டியிலேயே என் மீது நம்பிக்கை வைத்து அவர் அவ்வளவு பெரிய வார்த்தையை கூறியது என்னால் எப்போதும் மறக்க முடியாது”, ஹர்திக் பாண்டியா தன்னுடைய பழைய இனிப்பான நிகழ்வை தற்பொழுது நினைவு கூர்ந்துள்ளார்.