“தோனி பாய் எளிமையா ஒன்னு சொன்னார்” – இந்தியா அணிக்கு தேர்வான ரிங்கு சிங் உற்சாகப் பேட்டி!

0
920
Rinkusingh

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு செய்துள்ள சுற்றுப்பயணம் இந்திய கிரிக்கெட்டில் மிகவும் ஒரு முக்கியமான சுற்றுப்பயணமாகும்!

ஏனென்றால் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணி எவ்வாறு பயணிக்க இருக்கிறது என்பதை உறுதி செய்யும் தொடராகவும், இந்தியாவில் அடுத்து நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் புதிய வீரர்களின் வருகை ஏதாவது இருக்குமா? என்பதை தெரிவிக்கும் தொடராகவும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் அமையும்.

- Advertisement -

இந்த வகையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் கொல்கத்தா அணிக்கு பினிஷர் ஆக மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார் ரிங்கு சிங். எனவே இவருக்கு வெஸ்ட் இண்டீஸ் டி 20 தொடருக்கான இந்திய அணியில் மட்டும் இல்லாது, ஒருநாள் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் தருவதற்கு முன்னோட்டமாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் வாய்ப்பு கிடைக்குமா? என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எல்லோரும் எதிர்பார்ப்பும் பொய்யாக்கப்பட்டு இவருக்கு மொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் தேர்வு குழுவினர் இடம் தரவில்லை. இதனால் இது பெரிய சர்ச்சைக்குரிய விவாதமாக சமூக வலைதளத்தில் தொடர்ந்து இருந்து வந்தது.

இந்த நிலையில் செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் சீனாவில் நடக்க இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு குழுவினர் ரிங்கு சிங்குக்கு இடம் அளித்திருக்கிறார்கள். இதன் மூலம் ரிங்கு சிங்கின் கடின உழைப்புக்கு அர்த்தம் கிடைத்திருக்கிறது. அவருக்கு வாய்ப்பு தராதது குறித்த சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியா அணியில் முதல்முறையாக வாய்ப்பு பெற்ற ரிங்கு சிங் போடும் பொழுது “மகி பாய் உடனான உரையாடல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பேட்டிங்கில் அவரும் என்னைப் போலவே ஐந்து மற்றும் ஆறாம் இடங்களில் அதிகம் விளையாடியிருக்கிறார். அவர் அந்த இடங்களில் விளையாடுவதற்கு உள்ளேவும் வெளியேவும் இருந்திருக்கிறார்.

நான் எனது விளையாட்டை எவ்வாறு சிறப்பாக விளையாடுவது என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவருடைய ஆலோசனை மிகவும் எளிமையானது. அவர் என்னிடம் நீங்கள் இப்பொழுதே மிகவும் நன்றாக பேட்டிங் செய்கிறீர்கள், இதுவரை நீங்கள் செய்ததை தொடர்ந்து செய்யவும் என்று கூறினார்.

எல்லோரும் இந்திய ஜெர்சியை அணிய வேண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். நான் எதிர்காலத்தை குறித்து அதிகம் யோசிப்பது இல்லை. ஏனென்றால் நீங்கள் எவ்வளவு அதிகமாக யோசிக்கிறீர்களோ அவ்வளவு அதிகமான சுமையை சுமக்கிறீர்கள். நான் வாழ்க்கையை ஒவ்வொரு நாளாக எடுத்துக் கொள்கிறேன்.

அதே சமயத்தில் தொழில்முறையாக கிரிக்கெட் விளையாடும் எல்லோரும் தமது நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று ஒருநாள் அல்லது இன்னொரு நாள் அதை இலக்காகக் கொண்டிருக்கிறார்கள்.

நான் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்திருப்பதை காண என்னைவிட எனது குடும்பத்தார் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். இதற்காக அவர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தார்கள்! என்று கூறியிருக்கிறார்.