“தோனிக்கும் கோலிக்கும் கடைசி போட்டி எங்க நாட்டுலதான்!” – ஏபி.டிவில்லியர்ஸ் பரபரப்பான பேச்சு!

0
359
Dhoni

டி20 கிரிக்கெட்டின் ஆதிக்கம் தற்போது உலகக் கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவு இருந்து வருகிறது. அதேபோல ஐபிஎல் டி20 அணிகளின் உரிமையாளர்களின் ஆதிக்கமும் மற்ற நாட்டு டி20 லீக்குகளில் அதிகம் இருக்கிறது.

தற்பொழுது ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி உள்ள இந்திய உரிமையாளர்கள் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 லீக்குகளில் அணிகளை வாங்கி ஆதிக்கம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

குறிப்பாக தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் ஆறு அணிகளையும் ஐபிஎல் தொடரின் இந்திய முதலாளிகளே வாங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக உலகம் முழுவதும் டி20 லீக்குகளை கட்டுப்படுத்தும் சக்தியாக இந்திய ஐபிஎல் முதலாளிகள் உருவாகிறார்கள்.

மேலும் ஐபிஎல் தொடருக்கு அடுத்து பெரிய வெற்றி பெற்ற தொடராக தென் ஆப்பிரிக்காவின் டி20 தொடர் இருந்து வருகிறது. ஐபிஎல் தொடருக்கு அருகில் வணிகத்தில் இல்லை என்றாலும் கூட, தரம் மற்றும் கிடைக்கும் லாபத்தில் இரண்டாவது இடம் இந்தத் தொடருக்குத்தான். இதில் இந்திய வீரர்களை விளையாட வைக்கும் முயற்சியும் நடக்கிறது. மகேந்திர சிங் தோனியிடம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் கூறும் பொழுது “விராட் கோலியை எங்கள் தொடருக்கு கொண்டு வருவது சுலபம் என்று நினைக்கிறேன். (சிரிக்கிறார்) ஒருவேளை அவருடைய கேரியரின் இறுதியில் நாங்கள் சிறப்பான வழியனுப்பு விழாவை செய்வோம். இது சம்பந்தமாக நான் இதுவரை ராபின் உத்தப்பாவை தவிர வேறு யாரிடமும் பேசியதில்லை.

- Advertisement -

இந்திய வீரர்களை எங்கள் தொடரில் பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தற்பொழுது எங்களுடைய இரண்டாவது சீசனில் இது நடக்குமா என்று தெரியாது. ஆனால் மூன்றாவது சீசனில் இந்திய வீரர்கள் இங்கு இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

நாங்கள் இங்கு யாரை கொண்டு வருவோம் என்று எங்களுக்கு இதுவரை தெரியாது. ஆனால் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி போன்றவர்களின் கேரியரின் கடைசியில் இங்கு கொண்டு வருவது மதிப்புக்குரிய ஒன்று. நாங்கள் அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வோம் என்று உங்களுக்கே தெரியும்.

அதிக பொழுது போக்கு, அதிக நடனம் அதிக கூச்சல், அதிகம் பாடல் என்று தென் ஆப்பிரிக்கா டி20 லீக் சிறப்பாக இருக்கிறது. தாங்கள் சரியான பாதையில் செல்கிறோம். மேலும் கிரிக்கெட்டின் தரம் நன்றாக இருக்கிறது.கூட்டமும் இதனால் வருகிறது. எனவே நாங்கள் இன்னும் இதைச் சிறப்பாக மேற்கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!