டிரண்ட் போல்டை தவான் அடிக்க நினைத்தார்; ஆனால் நான் தடுத்து பொறுப்பை எடுத்துக் கொண்டேன் – இளம் பஞ்சாப் அதிரடி வீரர் பிரப்சிம்ரன் கெத்து பேட்டி!

0
146
Prabhsimran

ஐபிஎல் தொடரில் மோசமான செயல்பாட்டைக் கொண்டிருக்கும் அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி இருக்கிறது. நடந்து முடிந்திருக்கும் 15 ஐபிஎல் சீசன்களில் இதுவரை இரண்டே முறை மட்டும்தான் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது!

ஐபிஎல் ஏலத்தில் அதிக பணம் செலவு செய்து நட்சத்திர வீரர்களாக வாங்குவது, பின்பு அவர்கள் ஒரு தொடரில் சரியாக விளையாடாத பொழுது வெளியே அனுப்பிவிட்டு புதிய வீரர்களை வாங்குவது, ஒரு நிரந்தர அணியை உருவாக்க தவறுவது என்று, பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தொடர்ச்சியாக ஒரே தவறுகளை செய்து கொண்டிருந்தது.

- Advertisement -

கடந்த முறையும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல் நல்ல விலைக்கு அதிரடி வீரர்களாக வாங்கி போட்ட பஞ்சாப் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி வராமல் வெளியேறியது. இதைத்தொடர்ந்து கேப்டன் மயங்க் அகர்வாலை யோசிக்காமல் வெளியே விட்டது. தவானை கேப்டன் ஆக்கி மினி ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்குப் போய் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சாம் கரனை வாங்கியது.

இப்படியான நிலையில் இங்கிலாந்தின் அதிரடி வீரர்கள் பேர்ஸ்டோ மற்றும் லியாம் லிவிங்ஸ்டண் காயத்தின் காரணமாக இந்த தொடரில் விளையாடவில்லை. வீரர்கள் கைவசம் இருந்தும் காயத்தால் மீண்டும் பழைய நெருக்கடியான நிலையில் விழுந்தது பஞ்சாப் அணி.

இந்த நிலையில் ஐந்து வருடங்களாக பஞ்சாப் அணியில் சாதாரண வீரராக இருந்து வரும் பிரப்சிம்ரன் சிங் இந்த முறை துவக்க வீரராக வந்து தனது அபாரமான அதிரடி ஆட்டத் திறனால் எல்லோரது கவனத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். நேற்று ராஜஸ்தான் ராயல் சாணிக்கு எதிராக 34 பந்துகளில் 60 ரன்கள் குவித்து தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

தற்பொழுது கடந்த ஆட்டத்தைப் பற்றி பேசியுள்ள அவர் ” ட்ரண்ட் போல்டை நான் இதுவரை விளையாடியிருக்காத காரணத்தால், ஷிகர் தவான் பாஜி அவரை ஸ்ட்ரைக் செய்வதாக சொன்னார். ஆனால் நான் அவரை தடுத்து விட்டு அந்த பொறுப்பை நானே எடுத்துக் கொண்டேன். ஒவ்வொரு ஓவருகளுக்கு மத்தியிலும் அவர் என்னுடன் பேசி எனக்கு புரிய வைத்தார். மற்றதை எல்லாம் அவரைப் பார்த்துக் கொண்டார். ஐந்து வருட ஐபிஎல் பயணத்தில் இது எனக்கு முதல் அரை சதம். இதற்கு நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்!

தற்போது உள்ள அணியில் மூத்த வீரர்களின் யாரைப் பிடிக்கும் என்று கேட்டதற்கு ” எனக்கு இப்போதைக்கு அர்ஸ்தீப்பை பிடிக்கும். இப்போதைக்கு என் கேமரா முன்னால் நிற்கும் நீங்கள்
( ஜித்தேஷ் சர்மா ) அரை சதம் அடிப்பது குறித்து எனக்கு ஆலோசனை சொன்னீர்கள். ஷிகர் தவான் கப்பார்ஜி அவரை அணியில் எல்லோருக்குமே பிடிக்கும்!” என்று கூறியிருக்கிறார்!