இந்திய அணியில் ஷிக்கர் தவானின் இடத்துக்கு ஆபத்து – பிசிசிஐ எடுத்துள்ள அதிரடி முடிவு

0
314
Rahul Dravid and Shikar Dhawan

முப்பத்தி ஆறு வயதாகும் இந்திய அணியின் அனுபவமிக்க துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் கடந்த 2010ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். என்னதான் 2010 ஆம் ஆண்டிலேயே அறிமுகமானாலும், 2013 ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இருந்துதான் சரவெடியாக வெடிக்க தொடங்கினார். ரசிகர்களிடையே பிரபலமும் அடைந்தார். ஐசிசி தொடர் என்றாலே தவான் எனும் அளவிற்கு இருந்து வந்துள்ளது அவரது ஆட்டமும்.

இந்திய அணியின் மும்மணிகளில் ஒருவராக மாறிய தவான் இதுவரையில் ரோகித் சர்மாவுடன் இணைந்து இந்திய அணிக்கு சிறந்த துவக்கத்தை தந்து வந்துள்ளார். மொத்தம் 145 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள தவான் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை 45.5 சராசரியுடன் எடுத்துள்ளார். இதில் 17 சதங்களும் 53 அரை சதங்களும் அடங்கும். தவான் கடைசியாக ஆடிய 10 ஒருநாள் போட்டிகளில் 5 அரை சதங்களை விளாசியுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் தவானின் வயது மற்றும் இந்திய அணியின் வரும் காலம் கருதி அணியினுள் இளம் ரத்தத்தை பாய்ச்ச ஓபனிங் ஸ்பாட்டினை சிஎஸ்கே மற்றும் மகாராஷ்டிரா அணியின் துவக்க வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் க்கு வழங்கப்படலாம் என்ற செய்தி உலா வருகிறது.

ஒமைக்ரான் தொற்றின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு உள்ள சவுத் ஆப்பிரிக்கா தொடர் வருகின்ற இருபத்தி ஆறாம் தேதி செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியுடன் தொடங்குகிறது. இத்தொடர் மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை உள்ளடக்கியது. இத்தொடரில் ஒருநாள் போட்டியின் துவக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், ருத்ராஜ் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் இந்தியன் ஸ்குவாடில் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடரில் தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ஷிகர் தவான். ஒருவேளை தன்னை இத்தொடரில் நிரூபிக்க தவறும் பட்சத்தில், இதுவே அவருக்கு கடைசி ஒருநாள் தொடராகவும் மாறலாம். அவரது இடத்தினை தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசி அதிரடி காட்டிக்கொண்டிருக்கும் மகாராஷ்டிரா அணியின் கேப்டனும் துவக்க வீரருமான ருத்துராஜ் கெய்க்வாடால் கைப்பற்றக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ருத்துராஜ் கடைசியாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் துவக்க வீரராக 600 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து, சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -