பஞ்சாப் அணியை மயங்க் அகர்வாலுக்குப் பதிலாக வழிநடத்தும் ஷிகர் தவான் – காரணம் இதுதான்

0
127
Shikhar Dhawan PBKS Captain

ஐ.பி.எல்-ல் வாரத்தின் முக்கிய விடுமுறை நாளான இன்று டபுள் ஹெட்டர் போட்டியின் முதல் போட்டியில், நவிமும்பையின் டி.ஓய்.பாட்டில் மைதானத்தில், பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் இன்னும் சற்று நேரத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன!

ஹைதராபாத் அணி கடந்த கொல்கத்தா அணியுடனான போட்டியில், ராகுல் திரிபாதி மற்றும் எய்டன் மார்க்ரம் சிறப்பான பேட்டிங்கால் வென்று, ஐந்து ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களை வென்று, ஆறு புள்ளிகளோடு, ரன்ரேட் குறைவாய் இருப்பதால் புள்ளிபட்டியலில் ஏழாமிடத்தில் இருக்கிறது.

- Advertisement -

பஞ்சாப் அணி கடந்த மும்பை அணியுடனான போட்டியில் தவான் மற்றும் மயங்க் அகர்வாலின் சிறப்பான பேட்டிங்காலும், ஓடியன் ஸ்மித்தின் பவுலிங், பீல்டிங் பங்களிப்பாலும் வென்று, ஐந்து ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களை வென்று, ஆறு புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால், கால் விரல்களில் உண்டான காயத்தால் இன்றைய ஹைதராபாத் அணியுடனான போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவான் அணியை வழிநடத்துகிறார்!