“கடைசில ரகானே எனக்கு அப்படி செய்வார்னு நினைக்கவே இல்ல” – ஓய்வு பெற்ற குல்கர்னி நெகிழ்ச்சியான பேட்டி

0
470
Dhawal

2024 ஆம் ஆண்டு உள்நாட்டு டெஸ்ட் தொடர் ரஞ்சி டிராபி சாம்பியன் பட்டத்தை விதர்பா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று மும்பை அணி கைப்பற்றி இருக்கிறது. மும்பை அணிக்கு இது 42வது ரஞ்சி டிராபி டெஸ்ட் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. வேற எந்த மாநில அணிகளும் இந்த சாதனைக்கு அருகில் கூட கிடையாது. அந்த அளவிற்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.

இன்று நடந்து முடிந்த ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை 224, விதர்பா 105 ரன்கள் எடுத்தன. இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை 418 ரன்கள் எடுக்க, விதர்பா அணிக்கு 539 ரன்கள் டார்கெட் கொடுக்கப்பட்டது. மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடினாலும் மனம் தளராமல் போராடிய விதர்பா அணி 368 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.

- Advertisement -

இந்தப் போட்டியின் போது விதர்பா அணியின் கடைசி விக்கெட் விளையாடிய பொழுது, இந்த போட்டியுடன் ஓய்வு பெற இருக்கும் தபால் குல்கர்னிக்கு கேப்டன் ரகானே அழைத்து ஓவர் கொடுத்தார். இறுதியாக ரஞ்சி டிராபி பட்டத்தை மும்பை அணி வெல்வதற்கான கடைசி விக்கெட்டை, தனது கடைசி உள்நாட்டுப் போட்டியில் விளையாடும் தவால் குல்கர்னி கைப்பற்றினார். அவருக்கு இது மறக்க முடியாத உள்நாட்டு கடைசி கிரிக்கெட் அனுபவமாக நெகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.

இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் 95 முதல் தர போட்டிகளில் விளையாடி 281 விக்கெட்டுகளும், 130 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளும், 162 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணிக்காக இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு அறிமுகமானார். 12 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடிய இவர் 19 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகமானார். இரண்டு சர்வதேச டி20 போட்டிகள் மட்டும் விளையாடி ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றி இருக்கிறார்.

35 வயதான தவால் குல்கர்னி இறுதிப்போட்டிக்கு பிறகு பேசும் பொழுது “ஒரு கிரிக்கெட் வீரரின் கனவு உயர் நிலையில் தொடங்கி உயர் நிலையில் முடிப்பது ஆகும். நான் மொத்தம் ஆறு ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி இருக்கிறேன். அதில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இதுஎனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.

இதையும் படிங்க : சிஎஸ்கேவுக்கு புதுசா போனஸ் மாதிரி ஒருத்தர் கிடைச்சிருக்காரு.. 2024 எங்களுக்குதான் – பிராவோ பேட்டி

கடைசி விக்கெட்டுக்கு ரகானே என் கையில் பந்தை தருவார் என்று நான் நினைக்கவே இல்லை. அது ஒரு சிறந்த செயல். கடைசியில் இரண்டு விக்கெட்டுகளை துஷார் தேஷ்பாண்டே எடுத்திருந்த போதும், எனக்காக தந்தை கொடுத்ததற்கு ஹாட்ஸ்-ஆப். நீங்கள் பல ஆண்டுகளாக எங்களுக்காக பந்துவீச்சை வழிநடத்தி இருக்கிறீர்கள் என்று கூறி பந்தை என் கையில் தந்ததற்கு மிகவும் நன்றி” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -