212 ஸ்ட்ரைக் ரேட்.. இங்கிலாந்தில் சிஎஸ்கே அடையாளத்தில்.. நொறுக்கி தள்ளிய பிரிவிஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்

0
766
Brevis

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மாற்று வீரராக வந்து சிறப்பாக விளையாடிய தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரர் டிவால்ட் பிரிவிஸ் இங்கிலாந்து விட்டாலிட்டி ப்ளாஸ்ட் டி20 தொடரில் அறிமுக போட்டியில் சிஎஸ்கே அடையாளங்களுடன் அசத்தலாக பேட்டிங் செய்திருக்கிறார்.

தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணியில் இருந்து அண்டர் 19 உலககோப்பை தொடரில் எல்லோரது கவனத்தையும் கவர்ந்தவர் ஆக இருந்தார். மேலும் இவர் ஏபி டிவில்லியர்ஸ் முறையில் பேட்டிங் செய்யக் கூடியவர் என்பதால் மிக விரைவிலேயே ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் யாரும் இவரை வாங்கவில்லை.

- Advertisement -

சிஎஸ்கே அணிக்காக அசத்தல்

இந்த ஆண்டு சிஎஸ்கே ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சீசனாக இருந்த காரணத்தினால் இடையில் சில இளம் வீரர்களை காயமடைந்த வீரர்களுக்கு மாற்றாக வாங்கியது. அதில் டிவால்ட் பிரிவிஸ் மிக முக்கியமானவராக இருந்தார். பேட்டிங் மற்றும் களத்தில் அவர் கொண்டு வந்த ஆற்றல் சிஎஸ்கே அணிக்கு கடினமான நேரத்தில் மிக முக்கியமானதாக இருந்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே தொடர்ந்து தக்கவைக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது.

இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக மொத்தம் ஆறு போட்டிகளில் விளையாட கிடைத்த வாய்ப்பில் இரண்டு அரை சதங்கள் உடன் 37 ரன் ஆவரேஜில், 180 ஸ்ட்ரைக் ரேட்டில் 225 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இதை அப்படியே எடுத்துச் சென்று இங்கிலாந்து டி20 தொடரிலும் அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே அடையாளங்களுடன் அசத்தல்

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து நாடு திரும்பிய டிவால்ட் பிரிவிஸ் நேராக இங்கிலாந்து விட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடரில் ஹாம்ஸையர் அணிக்காக முதல் முறையாக எசக்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கினார். இந்த போட்டியில் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் வந்த அவர் 32 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 212 ஸ்ட்ரைக் ரேட்டில் 68 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் இவர் விளையாடிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 230 ரன் குவித்தது. இதை தொடர்ந்து எதிரணியை 124 ரன்னில் மடக்கி, 106 வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றார்கள்.

இதையும் படிங்க : ஹர்திக் டி20 WC பைனல் கட்டிங் சேவிங் பண்ணா போதுமா.. சூர்யா செய்த மாஸ் சம்பவம்.. பாவமாக சிக்கிய குஜராத் அணி

மேலும் இந்த போட்டியில் விளையாடிய டிவால்ட் பிரிவிஸ் சிஎஸ்கே அணிக்காக பயன்படுத்திய பேட்டிங் கிளவுஸ், மற்றும் சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிற பேட்ஸ் ஆகியவற்றையே அந்த அணிக்காகவும் பயன்படுத்தி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிஎஸ்கே அடையாளங்களுடன் இங்கிலாந்தில் அசத்தி இருக்கும் இவருக்கு சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -