நேற்று எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெல்லும் இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை சூரியகுமார் செய்த ஒரு காரியம் தோல்வியை நோக்கி கொண்டு வந்தது குறித்து ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 229 ரன்களை எடுத்து வென்றுவிடும் என்கின்ற சூழ்நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் மும்பை குஜராத் அணியை 20 ஓவர்களில் 28 ரன்களில் கட்டுப்படுத்தி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஹர்திக் பாண்டியாவின் கட்டிங் சேவிங்
2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியின் போது ஹர்திக் பாண்டியா வித்தியாசமான சிகை அலங்காரத்தில் வந்திருந்தார். அதை ஜாரோ ஸ்டைல் என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் அதை நினைவுபடுத்தும் விதமாக அதே சிகை அலங்காரத்துடன் நேற்று எலிமினேட்டர் போட்டிக்கும் வந்தார்.
இதை வைத்து ரசிகர்கள் கட்டாயம் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறையும் கோப்பையை வெல்லப் போகிறது என சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக ஹர்திக் பாண்டியாவை வைத்து பதிவிட்டு வந்தார்கள். ஆனால் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா கேப்டன்ஷியில் சிறப்பாக செயல்பட்டது போல நேற்று ஹர்திக் பாண்டியாவால் செயல்பட முடியாதது விமர்சனம் ஆகி இருக்கிறது.
சூரியகுமார் செய்த காரியம்
இந்த நிலையில் சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் மிகச் சிறப்பான வேகத்தை முன்னெடுத்து போட்டியில் கொண்டு சென்றார்கள். அப்பொழுது ஹர்திக் பாண்டியா பந்தை பும்ரா கையில் கொடுத்திருந்தார். அவர் பந்து வீசுவதற்கு முன்பாக சூரியகுமார் யாதவ் திடீரென காயம் என தரையில் படுத்து விட்டார். உடனே மும்பை பிசியோ வந்து காலுக்கு மருத்துவம் பார்க்க, உடனே முதுகு பிடித்துக் கொண்டது என்று திரும்பி படுத்துக் கொண்டார். இதன் காரணமாக நேரம் வீணாக குஜராத்தின் மொமண்டம் தடைப்பட்டது. உடனே வாஷிங்டன் சுந்தர் பும்ரா பந்துவீச்சில் ஆட்டம் இழக்க போட்டி மும்பை பக்கம் திரும்பியது.
இதையும் படிங்க : அவங்க கிட்ட இந்த வேலையை வச்சுக்கோங்க.. என்கிட்ட வேணாம்.. ஜெயவர்த்தனாவை புறக்கணித்த பும்ரா.. என்ன நடந்தது?
இதே போல ரிஷப் பண்ட் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் கிளாஸன் மற்றும் டேவிட் மில்லர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது காயம் என்று கூறி நேரத்தை வீணடித்து அவர்களுடைய மொமெண்டத்தை கெடுத்து விட்டார். நேற்று சூரியகுமார் அதே வித்தையை கையில் எடுத்து குஜராத் அணியின் மொமண்டத்தை கெடுத்து விட்டார். தற்போது ரசிகர்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி கட்டிங் சேவிங்கை செய்தால் போதாது, அந்தப் போட்டியில் இந்திய அணி செய்த மொத்த வித்தைகளையும் பரிதிக் பாண்டியா செய்ய வேண்டும் என நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள்.






