இந்திய கிரிக்கெட்

6 போட்டி 605 ரன்.. எனக்கு இந்திய ODI டீம்ல இடம் கிடைக்காத காரணம் இதுதான்.. டிகே வாழ்க்கையை மாத்தினார்

தற்போது விஜய் ஹசாரே டிராபியில் மிகச்சிறந்த பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தியும் தேவ்தத் படிக்கலுக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது விஜய் ஹசாரே டிராபியில் ஆறு போட்டிகளில் நான்கு சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் உடன் 605 ரன்கள் குவித்திருக்கிறார். இந்தத் தொடரில் 600 ரன்கள் தாண்டி எடுத்த மூன்றாவது வீரர் என்ற பட்டியலில் நுழைந்திருக்கிறார். இருந்த போதும் அவருக்கு இந்திய ஒரு நாள் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இடம் கிடைக்காத காரணம் இதுதான்

இது குறித்து பேசி உள்ள தேவ்தத் படிக்கல் கூறும் பொழுது ” என்ன இந்திய ஒரு நாள் அணியில் தேர்வு செய்யாதது எனக்கு ஏமாற்றம் அளித்தது என்று நான் கூற மாட்டேன். நான் தேர்வு எப்படி வருகிறது என்று பார்ப்பதற்கு காத்திருந்தேன். என்னுடைய பெயர் அதில் இடம் பெறவில்லை. அதே நேரத்தில் அணியில் இடம் பெற்று இருந்த பேட்ஸ்மேன்கள் சரியானவர்களாக இருந்தார்கள். அவர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்திய ஒருநாள் அணியில் நுழைவது கடினம் என்பதை புரிந்து கொண்டேன்”

“நீங்கள் கிரிக்கெட் வீரராக உங்களை சமாதானம் செய்து கொள்ள வேண்டிய இடம் இது. உங்கள் கைகளில் எதுவும் கிடையாது. நீங்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்துக் கொண்டே இருக்க வேண்டும்”

- Advertisement -

தினேஷ் கார்த்திக் காரணம்

“நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்காக உருவானேன். எனவே எனக்கு டி20 கிரிக்கெட் அணுகுவதில் நிறைய சிக்கல்கள் இருந்தது. மேலும் நான் துவக்க வீரராக பவர் பிளேவில் விளையாடி வந்தேன். பவர் பிளேவுக்கு வெளியே விளையாடுவதிலும் சிக்கல் இருந்தது”

இதையும் படிங்க : வெறும் 6 போட்டி.. 15 விக்கெட்ஸ்.. சிஎஸ்கே நல்ல வேலையா இவரை எடுத்தீங்க.. இந்த ஐபிஎல் சீசன் வேற மாதிரி பெர்ஃபார்ம் பண்ணுவாரு – அஸ்வின் கருத்து

“இந்த நிலையில் எனக்கு ஆர்சிபி அணியின் பயிற்சியாளர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆண்டி பிளவர் இருவரும்தான் மிகவும் உதவியாக இருந்தார்கள். நான் பவர் பிளேவுக்கு வெளியே எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்த தெளிவை அவர்கள் எனக்கு கொடுத்தார்கள். இதிலிருந்து எனது ஆட்டமுறை மாறியது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by