கடந்த ஐபிஎல் தொடரில் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை மிகவும் வலுவாக களம் இறங்க உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சிஎஸ்கே பவுலர் ஒருவரின் மறுபிரவேசம் குறித்து சில முக்கிய கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கடந்த ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் சிறப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் செயல்பட்ட போதிலும் பேட்டிங்கில் மிகவும் மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தியதால் கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி இடத்தை பிடித்தது. இருப்பினும் அந்த ஆண்டு சில இளம் வீரர்களை தங்கள் அணிக்கு இழுத்து பேட்டிங்கில் பலப்படுத்திக் கொண்டது. கடந்த ஐபிஎல் தொடரில் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தமிழக பவுலர் குர்ஜப்னீத் சிங் விளையாட முடியாமல் போக, அவருக்கு பதிலாக டெவால்ட் பிரவிசை 2 கோடி ரூபாய்க்கு எடுத்தது.
இருப்பினும் தமிழக பவுலரின் திறமையை கருத்தில் கொண்டு சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டது. அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக விஜய் ஹசாரே டிராபியில் திரிபுரா அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகள் கைப்பற்றி தமிழக அணி கால் இறுதிக்கு முன்னேற முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஜப்னீத் சிங் கடந்த சீசனில் ஏற்பட்ட காயத்தால் பின்னடைவுக்குப் பிறகு மீண்டும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது மனதை தொடும்படி இருக்கிறது. அற்புதமான மெதுவான பந்துவீச்சை கொண்ட உயரமான இடது கை வேகப்பந்துவீச்சாளர் விஜய் ஹசாரே டிராபியில் ஜொலிக்கிறார். திரிபுரா அணிக்கு எதிராக ஆறு விக்கெட்டுகள் உட்பட மொத்தமாக 6 போட்டிகளில் 15 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.
இதையும் படிங்க:இந்த 3 மாநிலத்தில் இருந்து வரலன்னா.. இப்படிதான் இந்திய அணியில் இடம் பிடிக்க போராடனும்.. ருதுராஜ் குறித்து ராபின் உத்தப்பா
இது தமிழ்நாடு அனைத்து மிகவும் தேவையான வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் அவர் இந்தியாவை பிரதிநிதிப்படுத்த விதமாக 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். இந்த ஐபிஎல் சீசன் அவருக்கு சிறப்பாக அமைய வேண்டும் என்று என் வாழ்த்துக்கள் என அஸ்வின் கூறியிருக்கிறார்.






