“ஆஸ்திரேலியா அழிச்சிடுவாங்க..போட்டி பயங்கரமா இருக்கும்!” – இந்திய லெஜெண்ட் பயம் காட்டும் பேச்சு!

0
930
ICT

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா அணி இதுவரை இறுதிப் போட்டிக்கு எட்டு முறை முன்னேறி இருக்கிறது. எட்டாவது முறையாக தற்பொழுது இந்தியாவுக்கு எதிராக விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இதற்கு முன்பு விளையாடிய ஏழு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் ஐந்து முறை வெற்றி அடைந்திருக்கிறது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய பெருமை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு மட்டுமே இருக்கிறது.

- Advertisement -

பொதுவாக ஆஸ்திரேலியா அணி ஐசிசி தொடர்களுக்காகவே விளையாடுகின்ற அணி என்று கூறுவார்கள். அவர்கள் உலகக் கோப்பை தொடர்களுக்கு என்று எப்பொழுதும் சிறப்பாக தயாராகி வரக்கூடிய அணியாகவே இருந்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா அணிக்கு உலகக்கோப்பை தொடர்களுக்கு என்று ஒரு தனி மரபும் வரலாறும் இருந்து வருகிறது. இதன் காரணமாக எந்த ஒரு அணியும் அவர்களை உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சந்திக்க விரும்ப மாட்டார்கள்.

இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் கூட, ஆஸ்திரேலியா அணியை இறுதிப்போட்டியில் சந்திக்கின்ற காரணத்தினால், இந்திய அணி எல்லா வகையிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வெளியில் இருந்து அறிவுரைகள் வந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

இந்த வகையில் இந்திய அணியின் லெஜெண்ட் பேட்ஸ்மேன் குண்டப்பா விஸ்வநாத் கூறும் பொழுது “ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மிக நன்றாக உள்ளது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் ஹெட் இருவரும் அதிரடியாக ஆக்ரோஷமாக முன்னேற கூடியவர்கள். மேலும் அவர்களிடம் மார்ஸ் மற்றும் ஸ்மித் இருக்கிறார்கள். இவர்கள் ஒருங்கிணைந்து விளையாடும் பட்சத்தில் மிகப்பெரிய அழிவை கொடுக்கக் கூடியவர்கள். அதே சமயத்தில் இந்தியா வெல்ல முடியாது என்று சொல்லவில்லை.

இது ஒரு பயங்கரமான போட்டியாக இருக்கும். இந்தியா இந்தியாவில் விளையாடுகிறது மேலும் அனைத்து துறைகளிலும் பலமாக இருக்கிறது. இந்திய அணி விளையாடும் முறையின் காரணமாக இந்திய ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள்.

சில சமயங்களில் எதிரணியின் பெரிய பார்ட்னர்ஷிப்பை பார்க்கும் பொழுது நம்பிக்கை இழந்து விடுவோம். ஆனால் அரை இறுதியில் அந்த நேரத்திலும் இந்திய அணி தலை நிமிர்ந்து நின்றது. அது ஒரு பயங்கரமான அணுகுமுறை. இந்தியா 5 பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே தொடர்ந்தது. அவர்களுக்கு ஆறாவது பந்துவீச்சாளர் தேவைப்படவில்லை. மேலும் கேப்டன்சியும் மிக நன்றாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!