எங்க இலங்கை டீம் நிலவுக்கு மேல இருக்கு.. இங்கிலாந்து அணியை விடமாட்டோம் – தினேஷ் சண்டே மால் பேட்டி

0
124
Chandimal

இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இருந்தாலும் கூட தங்கள் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு நிலவுக்கு மேல் இருப்பதாக அந்த அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் சண்டிமல் கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் அதிரடியான முறையில் விளையாடி வருகிறது. அத்தோடு தங்களது சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அந்த அணியை தடுப்பது மிகவும் கடினமான காரியமாகவும் இருக்கிறது. இப்படியான நிலையில் இலங்கை அணி எதிர்பார்த்ததை விட சிறப்பான முறையில் விளையாடி ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

சரணடையாமல் போராடிய இலங்கை அணி

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி தைரியமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும் முதல் இன்னிங்ஸில் 113 ரன்களுக்கு முக்கிய ஏழு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இருந்தபோதிலும் கேப்டன் தனஞ்செய டி சில்வா 74 மற்றும் அறிமுக வீரர் பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது ஆக வந்த மிலன் ரத்னாயகே 72 ரன்கள் எடுக்க 236 ரன்கள் எடுத்து சமாளித்தது.

மேலும் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தினேஷ் சண்டிமல் இருவரும் அரை சதம் அடிக்க, இளம் வீரர் கவிழ்ந்து மெண்டிஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்து இங்கிலாந்து அணிக்கு 205 ரன் இலக்கை நிர்ணயித்து அசத்தினார்கள். இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் பேட்டிங்கில் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியாதது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நிலவுக்கு மேல் இலங்கை அணி

இது குறித்து பேசி இருக்கும் இலங்கை வீரர் தினேஷ் சண்டிமல் “நாங்கள் இந்த போட்டியில் சந்திரனுக்கு மேலே இருக்கிறோம். இந்த போட்டியில் கிடைத்த முடிவு வைத்து சொல்லவில்லை நாங்கள் இந்த போட்டியில் செயல்பட்ட விதத்தை வைத்து சொல்கிறேன். நாங்கள் விளையாடிய விதம் நம்ப முடியாததாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் அரைமணி நேரத்தில் முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டோம். பின்பு மிலன் ரத்னாயகே மற்றும் தனஞ்செய இருவரும் சிறப்பாக விளையாடி அணியை மீட்டார்கள்.

நாங்கள் பந்துவீச்சுக்கு வந்த பொழுது இரண்டு இன்னிங்ஸ்களிலும் அசிதா பெர்னாடோ மற்றும் பிரபா ஜெயசூர்யா இருவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எனவே எங்களிடம் நிறைய நேர்மறையான விஷயங்கள் இருக்கிறது. நாங்கள் அடுத்த போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பான முறையில் போராடி, நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

இதையும் படிங்க : டிராவிட்டின் சாதனையை உடைத்தார் ஜோ ரூட்.. அடுத்த 5 போட்டிகளில் சச்சின் ரெக்கார்ட் காலியாகவும் வாய்ப்பு

நாங்கள் உண்மையில் இந்த போட்டியில் சிறப்பாக போராடினோம். ஆனால் எங்களிடம் 40 முதல் 50 ரன்கள் குறைவாக இருந்தது. நாங்கள் இந்தப் போட்டியில் இருந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். எங்களுடைய கடைசி கட்ட பேட்ஸ்மேன் 10 முதல் 15 ஓவர்கள் களத்தில் நின்று இருந்தால் இந்த போட்டியின் முடிவு வேறு மாறியாக இருந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -