டிராவிட்டின் சாதனையை உடைத்தார் ஜோ ரூட்.. அடுத்த 5 போட்டிகளில் சச்சின் ரெக்கார்ட் காலியாகவும் வாய்ப்பு

0
172
Dravid

இங்கிலாந்து நட்சத்திர வீரர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை ஆட்சி செய்து வருகிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் 2019 ஆம் ஆண்டில் இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டின் சிறப்பான ஒரு சாதனையை முறியடித்திருக்கிறார்.

நேற்று இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 205 ரன்கள் டார்கெட்டை நோக்கி விளையாடிய பொழுது இறுதிவரை ஆட்டம் இழக்காமல் அரைசதம் அடித்து இங்கிலாந்து அணியை வெல்ல வைத்தார். இதன் மூலம் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டின் நவீன கால ராஜா

தற்போது ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்களை முறியடிப்பதற்கான வாய்ப்பில் உள்ள ஒரே வீரராக இருக்கிறார். தற்போது விளையாடி வருவதில் எந்த ஒரு வீரரும் இந்தச் சாதனைகளுக்கு குறிப்பிட்ட தூரத்தில் கூட இல்லை.

சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் 68 அரைசதங்கள் மற்றும் 15,921 ரன்கள் குவித்திருக்கிறார். ஜோ ரூட் தற்பொழுது 32 சதங்கள் மற்றும் 64 அரைசதங்கள் உடன் 12,131 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறார். இன்னும் நான்கு ஆண்டுகள் சீராக விளையாடினால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்த சச்சின் சாதனையை முறியடிக்கலாம்.

- Advertisement -

டிராவிட் சாதனை உடைப்பு

நேற்று இலங்கை அணிக்கு எதிராக அரைசதம் அடித்ததின் மூலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்திருந்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் ராகுல் டிராவிட் மற்றும் இங்கிலாந்தின் ஆலன் பார்டர் இருவரையும் தாண்டி மூன்றாவது இடத்தை பிடித்தார்.

தற்போது ஜோ ரூட் 263 இன்னிங்ஸ்களில் 64 சர்வதேச டெஸ்ட் அரைசதங்கள் அடித்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 329 இன்னிங்ஸ்களில் 68 அரைசதங்கள் அடித்திருக்கிறார். மேற்கொண்டு ஜோ ரூட் இன்னும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் கூட சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த சச்சின் சாதனையை முறியடிப்பதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணி வெற்றி.. WTC புள்ளி பட்டியலில் மாற்றம்.. பாகிஸ்தான் பரிதாபம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரை சதங்கள் அடித்த முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் :

சச்சின் டெண்டுல்கர் – 329 – 68
சந்தர்பால் 280 – 66
ஜோ ரூட் – 263 – 64
ராகுல் டிராவிட் – 286 – 63
ஆலன் பார்டர் – 265 – 63

- Advertisement -