சிஎஸ்கே மற்றும் பஞ்சாப்க்கு பயம் காட்டும் டெல்லி; ஆர்சிபி அணியை அடித்து துவைத்தது; பரபரப்பாகும் ஐபிஎல்!

0
1648
Ipl2023

இன்று இரண்டு போட்டிகளில் இரண்டாவது போட்டியில் டெல்லி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன!

இந்த போட்டிக்கான டாசில் ஜெயித்த பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் விக்கட்டுக்கு 82 ரன்கள் வந்தது. கேப்டன் பாப் 32 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் முதல் பந்திலயே ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்குப் பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் லோம்பரர் 55 ரன்கள்பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். விராட் கோலி 46 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தினேஷ் கார்த்திக் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அனுஜ்ராவத் 8 ரன்களும், லோம்பரர் ஆட்டம் இழக்காமல் 29 பந்தில் 54 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. மார்ஷ் 3 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்

இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு அதிரடியான துவக்கம் அமைந்தது. கேப்டன் டேவிட் வார்னர் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். முதல் விக்கட்டுக்கு 60 ரன்கள் கிடைத்தது. இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த சால்ட் மற்றும் மார்ஷ் இருவரும் அதிரடியில் பின்னி எடுத்தார்கள். இந்த கூட்டணி 69 ரன்கள் பார்ட்னர் அமைத்தது. சிறப்பாக விளையாடிய மார்ஷ் 17 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய சால்ட் பெங்களூர் அணிக்கு எந்தவித வெற்றி வாய்ப்பையும் தராமல் அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்தார். சிறப்பாக விளையாடிய அவர் 45 பந்துகளில் எட்டு பவுண்டரி ஆறு சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து விளையாடிய ரூசோ 35, அக்சர் படேல் 8 ரன்கள் எடுக்க பதினாறு புள்ளி நான்கு ஓவர்களில் இலக்கை எட்டி டெல்லி அணி தனது நான்காவது வெற்றியை பதிவு செய்தது. பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் மூன்று ஓவர்கள் பந்துவீசி 29 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

தற்பொழுது சென்னை அணியும் பஞ்சாப் அணியும் டெல்லி அணியுடன் இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டி இருக்கிறது. டெல்லி அணி திடீரென்று ஒரு சரியான பிளேயிங் லெவனை கண்டுபிடித்து வந்து அச்சுறுத்தல் தரும் அணியாக மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!