யார் தோற்பது என்று போட்டி போட்ட டெல்லி ஹைதராபாத் ; கடைசியில் ஒரு வழியாக வென்றது டெல்லி!

0
5468
Ipl2023

ஐபிஎல் 16ஆவது சீசனின் 34 ஆவது போட்டியில் ஹைதராபாத் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் யார் தோற்பது என்று போட்டியிட்ட ஒரு போட்டியில் இறுதியாக டெல்லி கேப்பிடல் அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் ஒரு வழியாக வெற்றி பெற்றது!

முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தைரியமாக பேட்டிங் தேர்ந்தெடுத்தார். டெல்லி அணி இந்த முறை பிரத்விஷாவை கழட்டி விட்டது.

- Advertisement -

டெல்லி அணிக்கு பில் சால்ட் 0, மிட்சல் மார்ஸ் 25, டேவிட் வார்னர் 21, சர்பராஸ் கான் 10, அமன் கான் 4, மனிஷ் பாண்டே 34, அக்ஸர் படேல் 34, ரிபால் பட்டேல் 4, நோர்க்கியா 2, குல்தீப் யாதவ் 4, இஷாந்த் ஷர்மா 1 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் வந்தது. வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் பந்து வீசி 28 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

குறைவான இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் இருந்தே வெற்றிக்கு விளையாடியது போல் தெரியவில்லை. அந்த அணிக்கு ஹாரி புரூக் 7, ராகுல் திரிபாதி 15, அபிஷேக் ஷர்மா 5, மயங்க் அகர்வால் 49, மார்க்ரம் 3, கிளாசன் 31, வாஷிங்டன் சுந்தர் 24, யான்சன் 2 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அக்சர் படேல் நான்கு ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் விட்டுத் தந்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஏழாவது போட்டியில் விளையாடிய இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றி பெற்றிருக்கின்றன. ஹைதராபாத் அணி ஒன்பதாவது இடத்திலும், டெல்லி அணி பத்தாவது இடத்திலும் தற்போது நான்கு புள்ளிகள் உடன் தொடர்கின்றன!

- Advertisement -