பத்தாவது இடத்தை விடாமல் பிடித்துக் கொண்ட டெல்லி ; தொடர்ந்து ஐந்தாவது தோல்வி; தப்பு செய்தாலும் தப்பித்துக் கொண்ட ஆர்.சி.பி!

0
357
RCB

இன்று 16ஆவது ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பெங்களூரு டெல்லி அணிகள் பெங்களூரில் மோதிய போட்டியில் தற்போது பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி இருக்கிறது!

டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு கேப்டன் பாப் 22, விராட் கோலி 50, மகிபால் லோமரர் 26, மேக்ஸ்வெல் 24, ஹர்ஷல் படேல் 6, தினேஷ் கார்த்திக் 0, ஷாபாஷ் அகமத் 20*, அனுஜ் ராவத் 15 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி ஆறு விக்கட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இந்த போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடிப்பதற்கு வாய்ப்பு இருந்த நிலையில், டெல்லி அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை சரியாக விளையாடாமல் திடீரென்று பெரிய விக்கெட் சரிவு உண்டாக, பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் 174 ரன்கள் மட்டுமே பெங்களூரு எடுத்தது. ஆனால் டெல்லியின் பேட்டிங் அதைவிட மோசமாக இருந்தது. டெல்லி தரப்பில் குல்தீப் மற்றும் மார்ஷ் இருவரும் தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து துரத்தக்கூடிய எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு பிரித்திவி ஷா 0, மார்ஷ், யாஷ் துல் 1 என இரண்டு ரன்னுக்கு மூன்று விக்கெட்டுகள் விழுந்தது. இதற்கு அடுத்து கேப்டன் டேவிட் வார்னர் 19 ரன்னில் வெளியேறினார்.

ஐந்தாவது விக்கட்டுக்கு வந்த மனிஷ் பாண்டே ஐம்பது ரன்கள் எடுத்தாலுமே அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. அபிஷேக் 5, அக்சர் படேல் 21, அமான் கான் 18, லலித் யாதவ் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆட்டம் இழக்காமல் நோர்கியா 23, குல்தீப் யாதவ் 7 ரன்கள் எடுத்து களத்தில் இருக்க, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பெங்களூர் அணிக்கு கர்நாடக மாநில வேகப்பந்துவீச்சாளர் வைஷாக் விஜயகுமார் இன்று அறிமுகமாகி முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

நான்காவது போட்டியில் விளையாடிய பெங்களூரு அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். ஐந்தாவது போட்டியில் விளையாடிய டெல்லி அணிக்கு இது ஐந்தாவது தோல்வியாகும். இதற்குமேல் இந்த அணி மீண்டும் வந்து பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்தால் அது ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக அமையும்!