“குஜராத்தை பந்தாடிய டெல்லி” …. சிபாலி வர்மாவின் அதிரடியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

0
152

தற்போது இந்தியாவில் மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு முதல் மகளிருக்கும் ஐபிஎல் போட்டி தொடர்களை நடத்த திட்டமிட்ட பிசிசிஐ அதனை செயல்படுத்தி வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

இன்று நடைபெற்ற ஒன்பதாவது போட்டியில் ஸ்நேக் ராணா தலைமையிலான குஜராத் ஜெயன்ஸ் அணியும் மேக் லேனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி டெல்லி அணியின் பந்துவீச்சை சந்திக்க முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாறியது.

- Advertisement -

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. டெல்லி அணிக்காக ஆடிய தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளர் மரிசானா கேப் சிறப்பாக பந்துவீசி 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணியின் பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷிகா பாண்டே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து 106 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி ஏழு ஓவர்களில் அதிரடியாக ஆடி விக்கெட் இழப்பின்றி அபாரமான வெற்றியை பெற்றது. அந்த அணியின் துவக்க வீரரான ஷிபாலி வர்மா மிகச் சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 76 ரன்களை குவித்தார். இதில் 5 சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும் . இந்தப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வழங்கிய மரிசானா கேப் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மும்பை அணியுடன் 6 புள்ளிகளை பகிர்ந்து கொண்டுள்ளது.

போட்டிக்கு பின்னர் பேசிய ஷிபாலி” எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாகவே ஆடியதாக தெரிவித்தார். சென்ற போட்டியில் ஃபிலிக் ஷாட் ஆடும் போது ஆட்டம் இழந்ததால் இந்தப் போட்டியில் நேராக அதிகமான ஷாட்களை ஆட முயற்சித்ததாக தெரிவித்தார். அதற்கு நல்ல பலனும் கிடைத்ததாக அந்தப் பேட்டியில் கூறினார். தொடர்ந்து இது போன்ற ஆட்டத்தின் மூலம் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்ற வேண்டும் என தெரிவித்தார். சில நேரங்களில் சிறிய விஷயங்கள் கூட மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என அவர் கூறினார். இனி வரும் போட்டிகளிலும் இதுபோன்ற ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என கூறி முடித்தார் ஷிபாலி வர்மா.

- Advertisement -