29 பந்தில் சதம்.. எனக்கு ஐபிஎல் வித்தியாசமான உலகமாக இருக்கு – 22 வயது மெக்கர்க் பேட்டி

0
661
Jake

நேற்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணி தனது சொந்த மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லக்னோ அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அறிமுகமான ஆஸ்திரேலியாவின் 22 வயதான ஜாக் பிரேசர் மெக்கர்க் ஐபிஎல் உலகம் மிகவும் வித்தியாசமாக இருப்பதாக பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணி தங்களது சொந்த மைதானத்தில் வழக்கமாக முதலில் பேட்டிங் செய்வது போல முடிவு எடுத்தது. 94 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி, ஆயுஷ் பதோனி 35 பந்தில் 55 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக செயல்பட்டு இருபது ரன்கள் மட்டும் கொடுத்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் பவர் பிளேவிலேயே ஆட்டம் இழந்த காரணத்தினால், மூன்றாவது இடத்தில் ஜாக் பிரேசர் மெக்கர்க் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். தான் சந்தித்த இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு அடித்தார். மறுபடியும் இரண்டாவது சிக்சர் அடித்து தன்னுடைய ரன் கணக்கை வேகப்படுத்திக் கொண்டார்.

ஆனால் பவர் பிளே முடிந்து அவர் ரன் எடுப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்த நிலையில் கேப்டன் ரிஷப் பண்ட் உடன் இணைந்து இலக்கை நோக்கி பொறுமையாக விளையாடினார். இதற்கு அடுத்து டெல்லி கேப்பிட்டல் அணிக்கு க்ருனால் பாண்டியா 48 பந்துகளில் 68 ரன்கள் தேவை என்கின்ற நிலையில் பந்து வீச வந்தார். அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டு, பந்துக்கும் ரன்னுக்கும் ஆன வித்தியாசத்தை சமன் செய்துவிட்டார். இவர் 35 பந்தில் 55 ரன்கள் தனது முதல் ஐபிஎல் போட்டியில் எடுத்து, அணியின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்.

இவர் தன்னுடைய 21ஆவது வயதில் ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டில், டாஸ்மெனியா அணிக்கு எதிராக வெறும் 29 பந்துகளில் சதம் அடித்து, சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் மிகக் குறைந்த பந்தில் சதம் அடித்து உலகச் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : இதெல்லாம் ரொம்ப ஓவர்.. ரிஷப் பண்ட்க்கு கண்டிப்பா அபராதம் விதிக்கணும் – ஆடம் கில்கிறிஸ்ட் விமர்சனம்

நேற்று வெற்றிக்குப் பின் பேசிய இவர் “நான் கடந்த ஐந்து ஆறு போட்டிகளாக வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு விளையாடும் ஆர்வத்தை தூண்டியது. பந்தை எவ்வளவு தூரம் அடிக்கிறோம் என்பதற்கு பேட்டை எவ்வளவு சுற்றுகிறோம் என்பது விஷயம் அல்ல. இது மிடில் பேட்டில் பந்தை சந்திப்பது தொடர்பானது. பவர் பிளேவுக்கு வெளியே நான் விளையாட கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் அதிகப் போட்டிகள் விளையாட நான் நன்றாகப் பழகிக் கொள்வேன். ஐபிஎல் கிரிக்கெட் உலகத்தில் வித்தியாசமான ஒன்றாக இருக்கிறது. இப்படி ஒன்றைப் பார்த்தது கிடையாது. இங்கு இருப்பது ஆச்சரியம், எட்டு வாரங்கள் அனுபவிக்க முடியும்” எனக் கூறியிருக்கிறார்.