ஐபிஎல் 2025

அழுத்தமான சூழ்நிலையில் நன்றாக விளையாட.. இந்த விஷயமே காரணம்.. என் பலமும் அதுதான் – அசுதோஷ் ஷர்மா பேட்டி

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நாளை விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் டெல்லி அணியின் முக்கிய வீரராக மாறி இருக்கும் அசுதோஷ் சர்மா தான் விளையாடும் விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

டெல்லி அணியின் ஸ்டார் வீரர்

பஞ்சாப் அணியில் கடந்த சீசனில் மிடில் வரிசையில் களமிறங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அசுத்தோஸ் சர்மா. பல இக்கட்டான சூழ்நிலைகளில் பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த சூழ்நிலையில் இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இவரை வாங்கி மிடில் வரிசையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மிடில் வரிசையில் அனுப்பியது. லக்னோ அணிய நிர்ணயித்த 208 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு விளையாடிய அசத்தோஸ் சர்மா இறுதி ஓவரில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

31 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட இவர் 5 பௌண்டரி மற்றும் 5 சிக்ஸ் என 66 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார். இந்த சூழ்நிலையில் டி20 கிரிக்கெட் பொருத்தவரை தான் ஒவ்வொரு பந்தையும் அடிக்க முயற்சி செய்வதாகவும், அதற்கான பயிற்சிகளை எடுத்து வருவதாகவும் அசுதோஷ் சர்மா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

எனது பலம் இதுதான்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் பேட்டிங்கில் நிறைய கிரிக்கெட் விளையாடி வருகிறேன். நான் அதை ரசித்து விளையாடுகிறேன், இதனால் ஒவ்வொரு போட்டியின் போதும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றாக பேட்டிங் செய்ய முயற்சிப்பேன். நீண்ட நேரம் விளையாடுவேன் நான் குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களுடன் பயிற்சி செய்கிறேன். ஒவ்வொரு பந்தையும் நான் அடித்து விளையாட முயல்கிறேன். ஏனென்றால் ஒரு போட்டியில் இது போன்ற சூழ்நிலைகளில் எனது பேட்டிங் வரும்போது பந்தை அடிப்பது குறித்து யோசிப்பேன்.

இதையும் படிங்க:சிஎஸ்கே மேட்ச்க்கு நான் 26 பேரை வர சொன்னேன்.. ஆனா அதுக்காக விராட் கோலி வருத்தப்பட்டாரு – தினேஷ் கார்த்திக் பேட்டி

இந்த வழியில் நீங்கள் பயிற்சி செய்யும் போது நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். மேலும் வாய்ப்பு கிடைக்கும் போது நீங்கள் பந்தை சரியாக அடிப்பீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் உங்கள் பலத்தைப் பயன்படுத்தி விளையாட வேண்டும். நான் அப்படித்தான் செய்கிறேன்” என்று அவர் கூறியிருக்கிறார். இரண்டாவது போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி அணிக்கு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts