தன் முன்னாள் அணியான ராஜஸ்தானுக்கு ஆதரவு அளிக்க வந்த டெல்லி வீரர் சேத்தன் சக்காரியா – ரசிகர்கள் நெகிழ்ச்சி

0
68
Chetan Sakariya supporting RR in IPL Finals

பதினைந்தாவது ஐ.பி.எல் சீசன் தற்போது முடிவின் விளிம்பில் நிற்கிறது. குஜராத், லக்னோ என இரு புதிய அணிகள் பங்கேற்க பத்து அணிகள் களமிறங்கின. மும்பை, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய சாம்பியன் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறின. புதிய அணிகளான குஜராத், லக்னோ மற்றும் பழைய அணிகளான பெங்களூர் ராஜஸ்தான் அணிகள் ப்ளேஆப் சுற்றுக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் லக்னோ, பெங்களூர் அணிகள் தோற்று பிளேஆப் சுற்றிலிருந்து வெளியேற, குஜராத், ராஜஸ்தான் அணிகள் தற்போது இறுதிபோட்டியில், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரின் நரேந்திர மோதி மைதானத்தில் மோதி வருகின்றன.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஆச்சரியப்படும் விதமாக பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. குஜராத் அணியில் அல்ஜாரி ஜோசப்புக்கு பதிலாக பெர்குசன் வந்திருந்தர்.

ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் என்ற முடிவை எடுத்ததிற்கு அவரே வருத்தப்படும் விதமாக ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கும் அவரது பேட்டிங்கும் அமைந்தது. ஆரஞ்ச் தொப்பி வைத்திருக்கும் ஜோஸ் பட்லர் மட்டுமே சுமாராக ஆடினார். இதனால் இருபது ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 130 ரன்களையே எடுத்தது. குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி 17 ரன்களை மட்டுமே நான்கு ஓவர்களில் தந்தார்.

- Advertisement -

இதற்கடுத்து களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் சுப்மன் கில்தான் இன்று உலகின் அதிகபட்ச அதிர்ஷ்டமான மனிதர் என்றே சொல்லலாம். கேட்ச் வாய்ப்பு, எட்ஜ்கள் என்று தப்பி நிலைத்து ஆடிவருகிறார். கூடவே பேட்டிங்கிலும் ஹர்திக் பாண்ட்யா ஜொலித்து வருகிறார். தற்போது குஜராத் அணியே ஐ.பி.எல் கோப்பையின் அருகில் இருக்கிறது!

இந்தப் போட்டியைக் காண உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார். இதை அடுத்த அழகானதொரு காட்சியாகத் தன் பழைய அணியான ராஜஸ்தான் அணியை ஆதரிக்க, தற்பொது டெல்லி அணிக்காக விளையாடி வரும் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சக்காரியா வந்திருக்கிறார்.

2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக 1.20 கோடிக்கு வாங்கப்பட்ட சேத்தன் சக்காரியா, நடந்து முடிந்த மெகா ஏலத்தில் 4.20 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார். ராஜஸ்தான் அணியில் 14 ஆட்டம் விளையாட வாய்ப்பு பெற்ற சக்காரியா 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆனால் டெல்லி இந்தத் தொடரில் அவருக்கு மூன்று ஆட்டங்கள் மட்டுமே விளையாட வாய்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -