ஐபிஎல் 2025

2555 நாட்களுக்குப் பின்.. ஐபிஎல் தொடரில் தரமான சம்பவம்.. நம்பர் 1 பவுலர் பும்ராவின் பவுலிங்கை வெளுத்த கருண் நாயர் 2.0

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தற்போது பேட்டிங் விளையாடி வருகிறது.

- Advertisement -

இதில் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் தற்போது ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

7 வருடத்திற்கு பின் வாய்ப்பு

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்ட விளையாடியது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 33 பந்துகளில் 59 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

பின்னர் ரிக்கல்டன் 41 ரன், சூரியகுமார் யாதவ் 40 ரன்கள் குவித்தனர். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களம் இறங்கியது. காயம் காரணமாக பாப் டூ பிளசிஸ் வெளியேற அவருக்கு பதிலாக அபிஷேக் பொரேல் மற்றும் ஜேக் பிரேசர் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

- Advertisement -

இதில் ஜேக் பிரேசர் தனது முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேற, அவருக்கு அடுத்ததாக இம்பாக்ட் பிளேயராக கருண் நாயர் களம் இறங்கினார். தனது முதல் பந்தை பவுண்டரியுடன் தொடங்கிய கருண் நாயர் மும்பை அணியின் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக வெளுத்து வாங்கினார். அதிலும் குறிப்பாக உலகின் நம்பர் ஒன் பவுலர் பும்ராவின் 9 பந்துகளை எதிர்கொண்ட அவர் பவுண்டரி மற்றும் சிக்ஸர் என 23 ரன்கள் குவித்தார்.

கருண் நாயர் சிறப்பான ஆட்டம்

மொத்தமாக 22 பந்துகளை எதிர்கொண்ட அவர், 50 ரன்கள் குவித்து 7 வருடத்திற்கு பிறகு தனது முதல் ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்திருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 2555 நாட்களுக்குப் பிறகு தனது அரை சதத்தை பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயரை அவரது திறமையை கண்டு டெல்லி கேப்பிடல் அணி கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கியது.

இதையும் படிங்க:எங்க டீம்ல இவங்கதான் எனக்கு பெரிய நம்பிக்கை தராங்க.. இத வச்சு நான் என்ன வேணா செய்யலாம் – ஆர்சிபி கேப்டன்

கடந்த நான்கு போட்டிகளாக அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் இன்று தனது முதல் போட்டியில் விளையாடினார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை கருண் நாயர் 34 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்கள் குவித்து விளையாடி வருகிறார்.

- Advertisement -
Published by